நான் எனது மனசாட்சியின் படி பேசுகிறேன்,உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் எண்ணலாம்.எனக்கு இந்த கொலைகளில் எந்த தொடர்பும் இல்லை-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.

424

 

news_20-01-2015_53gota

வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட சுதந்திரமே  மகிந்தவின் தோல்விக்கு ஓரு காரணம் - சாலிக விமலசேன:

 

வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட சுதந்திரமே முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தோல்விக்கு ஓரு காரணம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்தபேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
கேள்வி- சுதந்திரம் என்பதை எவ்வாறு வர்ணிப்பீர்கள்?
பதில்-சுதந்திரம் என எதனை குறிப்பிடுகின்றீர்கள் தேசத்தின் சுதந்திரமா அல்லது தனிமனித சுதந்திரமா?
கேள்வி-கடந்த காலத்தில் இரண்டிற்கும் இடையில் வித்தியாசமிருந்தது-தனிநபர் சுதந்திரம் என்றால் என்ன?
 
பதில்-ஓருவர் தன்னுடைய வாழக்கையை எவ்வித தலையீடுகளுமின்றி வாழக்கூடிய நிலையை தனிநபர் சுதந்திரம் எனலாம்,எங்களுடையபெற்றோரும், சிறுவயதில் நாங்களும் அந்த சுதந்திரத்தை அனுபவித்தோம்.எவரும் எந்த வித முறையற்ற தலையீடுகளையும் சந்திக்கவில்லை.அவ்வேளைகளில் காணப்பட்ட அரசாங்கங்கள் கூட அவ்வாறு தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விதத்தில் செயற்படவில்லை.
கேள்வி- ஆகவே அரசாங்கங்கள் தேவையற்ற விதத்தில் பொதுமக்களின்சுதந்திரத்தில் தலையீடு செய்வது தவறு என்கிறீர்களா?
பதில்-சுதந்திரத்தை பாதுகாப்பது அரசாங்கத்திலுள்ளவர்களின் கடமை என நான் கருதுகிறேன். தொந்தரவு அற்ற வாழ்க்கை போன்றவற்றிற்கான சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாடு அதிகாரத்திலுள்ளவர்களுக்குண்டு.
கேள்வி- நீங்கள் பாதுகாப்பு செயலாளராக விளங்கிய அரசாங்கம் அவ்வாறான சூழலை மக்களுக்கு வழங்கியது என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்-நாங்கள் அதனை நிறைவேற்ற முயன்றோம்,வடக்குகிழக்கில் இந்த நிலையை ஏற்படுத்த நாங்கள் முயன்றோம்,எனினும் நாங்கள் இதனை சற்று வேகமாக நடைமுறைப்படுத்தி விட்டோம் என கருதுகின்றேன்,30 வருட யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் அங்கு சுதந்திரத்தை உறுதிசெய்தோம்.
கேள்வி- இதன் காரணமாகத்தான் முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோற்றார் என குற்றம்சாட்ட முனைகிறீர்களா?
பதில்-ஆம். வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட சுதந்திரமே முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு ஓரு காரணம். அந்த பகுதிகளுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்காவிட்டால் வடமாகாணசபை தேர்தலில் அவ்வாறான முடிவுகள் வந்திருக்கும் என நீங்;கள் கருதுகிறீர்களா?
கேள்வி- யுத்தம் முடிவடைந்து 5 வருடங்களுக்கு பின்னரும் இராணுவ- பொதுமக்கள் எண்ணிக்கை 5-1 என்ற அடிப்படையில் காணப்படுகின்றது?இதனையே சுதந்திரம் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்–படையினர் தங்கள் முகாம்களிலேயே இருந்தனர்.நாங்கள் அக்காலப்பகுதியில் இராணுவநடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை,வீதிதடைகளை அமைக்கவில்லை.
கேள்வி- ஆனால் அவர்கள் இரவுகளில் வீடுகளில் சோதன நடத்தினார்களே?
பதில்–.இல்லை நாங்கள் உண்மையில் நாங்கள் அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்க முயன்றோம்,அவர்களின் இதயங்களை வெல்ல முயன்றோம்.
கேள்வி- இந்த அழகான வார்த்தைகளில் தெரிவிக்கப்படுவதை மக்கள் அனுபவிக்கவில்லையே?
பதில்-நாங்கள் அவர்களின் இதயங்களை வெல்லதவறினோம் என்பது உண்மை ஆனால் நாங்கள் அதற்கான திட்டங்களை வைத்திருந்தோம்,மக்களை நெருங்கிச்சென்றோம்,
கேள்வி- ஆகவே நீங்கள் சரியாக செயற்பட்டீர்கள், இராணுவம்தான் பிழைவிட்டது என தெரிவிக்க முயல்கிறீர்களா?
பதில்-நான் அப்படி தெரிவிக்கவில்லை,இராணுவம் தனது பணியை செய்தது, ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை அரசியல் ரீதியாக வெல்லதவறிவிட்டோம்,அரசாங்கமும், எதிர்கட்சியினரும் இதனை செய்ய முயலவில்லை, அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆதிக்கம் செய்வதற்கு அனுமதித்தனர்.
கேள்வி- நீங்கள் பொருள் சார்ந்த அபிவிருத்தியையும்,சுதந்திரத்தையும் சேர்த்து குழம்பியுள்ளீர்களா?
பதில்-இல்லை ஆனால் பொருளாதரா அபிவிருத்தி  இல்லாமல் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதே?
கேள்வி-ஏன் தமிழ் மக்களின் நிலங்களை உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் கைப்பற்றி வைத்திருந்தீர்கள்?
பதில்-நாங்கள் அவர்களுடைய 90 வீத நிலங்களை விடுவித்தோம்,யுத்தம் நடைபெற்ற வேளை காணப்பட்ட நிலையை தற்போதைய நிலையுடன் ஓப்பிடுமாறு நான்உங்களை கேட்டுக்கொள்கிறேன். 30 வருட யுத்தத்தின் எதிர்மறையான விளைவுகளை நான்கு வருடத்தில் நீக்கிவிடமுடியாது.
கேள்வி- இதன் காரணமாகவா அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் கடத்தப்பட்டு காணமற்போனார்கள்?
பதில்-.இவை அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட பொய்கள், யாரும் அவ்வேளை காணமற்போகவில்லை.
கேள்வி- யாரும் காணமற்போகவில்லையா?
பதில்- யாரும் காணமற்போகவில்லை.
கேள்வி-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் காணமற்போனவர்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
பதில்–யார் காணமற்போனார்கள்?
கேள்வி-பத்திரிகையாளர்கள், அரசியல்செயற் பாட்டாளர்கள்?
பதில்-அவ்வேளை யுத்தம் நடைபெற்ற வேளை, விடுதலைப்புலிகள் செயற்பட்ட வேளை இவைஇடம்பெற்றன, பின்னர் இடம்பெறவில்லை.
கேள்வி- லலித் குகன் என்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் காணமற்போனது குறித்து அறிந்திருக்கவில்லையா?
பதில்-அவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பும் வரை எனக்கு அவர்கள் யாரும் என்பது எனக்கு தெரியாது.
கேள்வி- உங்கள் அனுமதியுடனேயே மக்கள் கடத்தப்பட்டார்களா?
பதில்– நான் அவ்வாறு சொல்லவரவில்லை,சில விடயங்களை நாங்கள் பகிரங்கமாக செய்யலாம்,முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கோபி விடயத்தை பாருங்கள்,அவரை நாங்கள் கைதுசெய்ய முயன்றவேளைதுப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.இதனை நாங்கள் வெளிப்படையாகவே நாட்டிற்கு தெரியப்படுத்தினோம்,ஏன் நாங்கள் ஆட்களை கடத்தி படுகொலைசெய்யவேண்டும்.
கேள்வி- லலித் குகன் கைதுசெய்யப்பட்டது குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படவில்லையா,?
பதில்– ஏன் அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள், மரண அச்சுறுத்தலிற்கு இலக்கான பலர் உள்ளனர்.இவர்கள் குறித்து எனக்கு தெரியாது.
கேள்வி-ஊடகங்களில் வெளியாகும் இத்தகைய செய்திகள்  குறித்து வாசிப்பதில்லையா?
பதில்-அரசியல் காரணங்களுக்காவே இந்த விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.இந்த கடத்தல்கள் எவ்வாறு நடைபெற்றன என்பது எனக்கு தெரியாது.அவர்களால் இராணுவத்திற்கோ அல்லது புலனாய்வு பிரிவினருக்கோ பாரிய அச்சுறுத்தல்காணப்பட்டதா?
கேள்வி-ஆனால் அவர்கள் மகிந்தராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆபத்தானவா்களே?
பதில்-.இவை கட்டுக்கதைகள்.
கேள்வி- ஆட்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும் கடத்தப்பட்டார்களா?இதனை பற்றி எதுவும் தெரியாதா?
பதில்– தெரியும்.
கேள்வி- ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?
பதில்-புலனாய்வு அமைப்புகளுக்கு இத்தகைய கடத்தல்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை என நான் தெரிவித்தேன்.நீங்கள் அதனை தானே கேட்டீர்கள்?
கேள்வி-வடக்கில் இவ்வாறாக பெருமளவு படையினர் இருக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் இது நடக்குமா?
பதில்-பலரின் தேவைக்கு ஏற்ப காணமல்போவதும், கொலைகளும் இடம்பெற்றன.ஆனால் அனதை;திற்கும் எங்கள் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற பின்னரே புலனாய்வு பிரிவினருக்கு இவை குறித்து தெரியவந்தது.தனிப்பட்ட சம்பவங்களையும், பொதுவானவையாக பார்ப்பதற்கு மக்கள் முயல்கின்றனர்.
இதன் காரணமாவே யுத்தத்திற்கு முன்னரும்,பின்னரும்காணப்படுகின்ற சுதந்திரத்தை ஓப்பிடுமாறு உங்களை கேட்டேன்?
கேள்வி- படையினர் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்பதை நிரூபித்திருக்கலாமே?
பதில்-புலனாய்வு பிரிவினர் போன்ற அமைப்புகளுக்கு தாங்கள் குற்றவாளிகளில்லை என்பதை நிரூபிப்பதற்கான வழியில்லை.குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசியல்வாதிகள் போன்று அவர்களால் செய்தியாளர் மாநாடுகளை நடத்த முடியாது.இந்த சம்பவங்கள் குறித்து கருத்துதெரிவிக்கும் பொலிஸார் மற்றும் படையினருக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி- ஆனால் இந்த விடயங்கள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறவில்லையேஃ
பதில்-இந்த சம்பவங்களுக்கும் புலனாய்வு பிரிவினருக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை.
கேள்வி- புலனாய்வு அமைப்பினருக்கு அவ்வாறான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான திறனில்லை என வெளிப்படையாக தெரிவிக்கின்றீர்களா?
பதில்-இல்லை ஊடகங்கள் தங்களை திருத்தவேண்டும்.ஆனால் நாங்கள் ஊடகங்களின் பின்னால் செல்ல விரும்பவில்லை,புலனாய்வு பிரிவினருக்கு அதற்கு அனுமதியில்லை.
கேள்வி- நான் உங்களை விசாரணைகள் குறித்த கேள்வியில் கவனம் செலுத்துமாறு கேட்கிறேன்?
பதில்-விசாரணைகள் இடம்பெற்றன,2005 ற்கு முன்னர் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளப்பட்ட எத்தனை சம்பவங்கள்குறித்து விசாரணைகள் இடம்பெற்றன என எனக்கு தெரிவியுங்கள்?கதிர்காமரை கொலைசெய்தவர்கள் கைதுசெய்யப்பட்டார்களா?நான் என்னுடைய காலத்தில் அந்த விசாரணைகளை சரியான விதத்தில் முன்னெடுத்தேன்.அதனை செய்தவர்கள் எந்த வித ஆதாரத்தையும்விட்டுவைக்கவில்லை.
கேள்வி- நீங்கள் தெரிவித்த சுதந்திரம் காரணமாகவா லசந்த படுகொலைசெய்யப்பட்டார்?பிரகீத்திற்கு என்ன நடந்தது? அவர் குறித்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டனவா?
 
பதில்-விசாரணைகளை நிறுத்த முடியாது, அவ்வாறு நிறுத்தினாலும் ஜனாதிபதி மீண்டும் அதனை ஆரம்பிக்கலாம்,
கேள்வி-லசந்தவை யார் படுகொலைசெய்தார்கள்?
பதில்- தெரியாது
கேள்வி பிரகீத்திற்கு என்ன நடந்தது?
 
பதில்- நாங்கள் உரிய விசாரணகைளை மேற்கொள்ளவில்லை என்றால் புதிய அரசாங்கம் அதனை மீள ஆரம்பிக்கலாம்.
கேள்வி- உங்கள் காலத்தில் விசாரணைகள் இடமபெறவில்லை என தெரிவிப்பதன் மூலமாக நீங்கள் விடயங்ளின் முக்கியத்துவத்தை குறைக்கவில்லையா?
பதில்-நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை,புலனாய்வு அமைப்பினரிடமிருந்து தகவல்கள் எனக்கு கிடைத்தன.அதிகாரிகள் இதற்கு மேல் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.இந்த சம்பவங்கள் யுத்தம் இடம்பெற்ற வேளையில் நடந்தன.
கேள்வி- பிரகீத் யுத்தம் முடிவடைந்த பின்னரே காணமற்போனார்?
பதில்-அது யுத்தத்திற்கு பின்னரா எனக்கு தெரியாது,நான் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இத்தகைய விடயங்களுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொள்வேன்,ஜனாக பெரேரா கொலைகள் போன்றவற்றின் பின்னாள் காணப்பட்ட மர்மத்திற்கு நாங்கள் பின்னர் தீர்வை கண்டோம்.
கேள்வி- லசந்தவிற்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருக்கவில்லையே?
பதில்-நான் அது குறித்து பேசவில்லை.இந்த விடயங்களுக்கு தீர்லை காண்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தே நான்பேசுகின்றனே;.
கேள்வி – நீங்கள் நேர்மையான விதத்தில் பேசுகிறீர்களா?
பதில்-ஆம் நான் எனது மனசாட்சியின் படி பேசுகிறேன்,உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் எண்ணலாம்.எனக்கு இந்த கொலைகளில் எந்த தொடர்பும் இல்லை.
SHARE