நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே நான்கு கட்சிகளுக்கு மேலாக 5ஆவது கட்சி ஒன்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கனடாவில் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
சில கட்சிகள் தங்களின் கட்சியின் முகவரியுடன் மக்களிடம் செல்ல அஞ்சுகின்றன. இதனால் தான் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்து விட்டு அந்த முகவரியுடன் மக்களிடம் செல்ல எண்ணுகிறார்கள். அக்கட்சிகளுக்கு பின்னணிகள் பல இருக்கின்றன. அந்த பின்னணியுடன் மக்கள் முன் செல்ல முடியாது, எனவே தான் அவர்கள் 5ஆவது கட்சி ஒன்றை பதிவு செய்யுமாறு கோருகிறார்கள். 4 கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்த பின் எதற்காக மற்றொரு கட்சியை தனியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
சுமந்திரன் வழங்கிய செவ்வியை கனடாவிலிருந்து வெளிவரும் ஈகுருவி என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதனை நன்றியுடன் இங்கே வெளியிடுகிறோம்.