முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்

476

 

எதிர்­வரும் மார்ச் முதலாம் வாரத்தில் பார­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற தேர்­த­லுக்கு அனைத்து கட்­சி­களும் தற்­போது தயா­ராகி வரு­கின்­றன.
கோத்தாபய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு ­செய்­யப்­பட்ட பின்னர் நாட்டில் நடை­பெறும் முத­லா­வது தேர்தல் என்­ப­தனால் இது­வொரு முக்­கி­யத்­து­வ­மிக்க தேர்­த­லாகும்.

பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு பாரா­ளு­மன்­றத்தில் போதி­ய­ள­வான பெரும்­பான்மை இல்­லாத நிலை­யி­லேயே தற்­போ­தைய ஆட்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும் ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­ப­க் ஷ­வினால் பல்­வேறு முக்­கிய திட்­டங்கள் நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்றன. இந்த திட்­டங்­க­ளுக்கு மக்கள் மத்­தியில் பாரிய வர­வேற்பும் கிடைக்கப் பெற்­றுள்­ளது.

“இந்த திட்­டங்­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவை. இதற்­கான ஆணை­யினை பாரா­ளு­மன்ற தேர்­தலில் வழங்­கு­மாறு ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக் ஷ பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தற்­போது பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­யினை முன்­னெ­டுக்கும் அர­சாங்­கத்­தினால் அதன் திட்­டங்­களை இல­குவில் முன்­னெ­டுக்க முடி­வ­துடன் எந்­த­வித சிரம­மு­மின்றி பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு தேவை­யான சட்­ட­மூ­லங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும்.

இது­வரை இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த­ன­வினால் மாத்­தி­ரமே 1977ஆம் ஆண்டு தேர்­த­லின்­போது ஐந்தில் நான்கு பெரும்­பான்­மை­யினை பெற முடிந்­தது.

எனினும் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் சுமார் 140 ஆச­னங்­களை கைப்­பற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரின் ஆத­ர­வுடன் மூன்­றி­லி­ரண்டு பாரா­ளுன்ற பலத்­தினை பெற்று பல்­வேறு செயற்றிட்­டங்­களை இல­கு­வாக முன்­னெ­டுத்­தது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே மீண்­டு­மொரு தடவை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யினை பெற முயற்­சி­க்கின்­றது.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜ­ய­தாச ராஜ­பக் ஷ மற்றும் அத்து­ர­லிய ரதன தேரர் ஆகியோர் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான இரண்டு பிரே­ர­ணை­களை கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்­ளனர்.

அதா­வது, முஸ்லிம் திரு­மண மற்றும் விவ­கா­ரத்து சட்ட மூலத்­தினை நீக்­குதல் மற்றும் பாரா­ளுன்ற தேர்தல் முறையில் காணப்­படும் விகி­தா­சா­ரத்­தினை மாற்­றி­ய­மைத்தல் ஆகி­யன தொடர்­பான சட்ட மூலமே பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த பிரே­ர­ணைகள் தொடர்பில் எந்­த­வித கருத்­துக்­க­ளையும் இது­வரை அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டாத நிலையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் பொது­ஜன பெர­முன ஆட்­சி­யமைக்கும் பட்­சத்தில் இதுபோன்ற சட்­ட­மூ­லங்­களை இல­கு­வாக நிறை­வேற்ற முடியும் என்ற அச்ச உணர்வு சிறு­பான்­மை­யினர் மத்­தியில் நில­வு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் சிறு­பான்­மை­யின மக்­களின் குறிப்­பாக முஸ்லிம் மக்­களின் பாரா­ளுன்ற பிர­தி­நி­தித்­துவம் என்­பது முக்­கிய விட­ய­மாகும். தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் சுமார் 20 முஸ்­லிம்கள் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளனர்.

இது போன்ற எண்­ணிக்­கை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே கடந்த மூன்று தசாப்த கால­மாக பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் சமூ­கத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

எனினும், பொது­ஜன பெர­முன எதிர்­பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யினை பாரா­ளு­மன்ற தேர்­தலில் கைப்­ப­றினால் முஸ்லிம் பிர­நி­தித்­து­வத்தில் பாரிய வீழ்ச்­சி­யொன்று ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் பொது­ஜன பெர­முன கட்சி முன்னாள் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு வெற்­றிலைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட்­டது.

இந்த தேர்­தலில் அக்­கட்­சிக்கு வன்னி மாவட்­டத்தில் மாத்­தி­ரமே முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்­தினை பெற முடிந்­தமை முக்­கிய விட­ய­மாகும். கடந்த நவம்பர் மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பாரி­ய­ள­வில் முஸ்­லிம்கள் ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­ப­க் ஷ­விற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.

எனினும், அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் முஸ்லிம் வாக்­கு­களை கைப்­பற்­று­வ­தற்­கான முயற்­சியில் ஜனா­தி­பதி பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­யான பொது­ஜன பெர­முன பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளன. இதற்­க­மைய, நாடா­ள­விய ரீதியில் முஸ்லிம் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்க அக்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

கொழும்பு மாவட்­டத்தில் பைஸர் முஸ்­தபா, களுத்­துறை மாவட்­டத்தில் மர்ஜான் பளீல், அம்­பாறை மாவட்­டத்தில் ஏ.எல்.எம்.அதா­உல்லா தலை­மை­யி­லான குழு, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நஜீப் ஏ. மஜீத், குரு­நாகல் மாவட்­டத்தில் ஏ.ஜே.எம்.முஸம்மில், வன்னி மாவட்­டத்தில் காதர் மஸ்தான், புத்­தளம் மாவட்­டத்தில் எம்.றியாஸ், கண்டி மாவட்­டத்தில் பாரிஸ் ஹாஜியார் ஆகியோரை கள­மி­றக்க பொது­ஜன பெர­முன தற்­போது தீர்­மா­னித்­துள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்­ரியை தேசி­யப்­பட்­டி­யலில் உள்­ளீர்க்க பொது­ஜன பெற­முன நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

எனினும், பொது­ஜன பெர­மு­னவில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளர்­களின் வெற்றி இன்று வரை கேள்­விக்­குறியா­கி­யுள்ள நிலையில் பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்பில் முஸ்லிம் கட்­சி­களும் அமை­தி­யா­கவே இருக்­கி­ன்றன.

கடந்த ஆட்­சியில் முஸ்லிம் சமூ­கத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரண்டு கட்­சி­களும் முக்­கிய பங்கு வகித்­தன. இந்த ஆட்­சிக்கு எதி­ராக பல்­வேறு சதித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் குறித்த இரண்டு முஸ்லிம் கட்­சி­களும் ஒற்­று­மை­யாக அவற்றை எதிர்­கொண்­டன.

அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் கேள்­விக்­கு­றியா­கி­யுள்ள நிலையில், இந்த இரண்டு கட்­சி­களும் பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்பில் இது­வரை எந்­த­வொரு தீர்­மா­னத்­தி­னையும் மேற்­கொள்­ளாமல் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஐ.தே.க.வின் தலைமை பத­விக்கு கொண்டு வரு­வ­தற்­கான போராட்­டங்­க­ளி­லேயே இறங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்த இரண்டு முஸ்லிம் கட்­சி­களும் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஒரு அணி­யாக முஸ்லிம் கூட்­ட­மைப்பு எனும் பெயரின் கீழ் கள­மி­றங்க வேண்டும் என்ற விடயம் முஸ்லிம் சமூ­கத்தில் பர­லா­வக பேசப்­ப­டு­கின்­றது. எனினும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வது தொடர்பில் இது­வரை இந்த இரண்டு கட்­சி­களும் எந்­த­வித முன்­னெ­டுப்­பி­னையும் மேற்­கொள்­ள­வில்லை.

அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐ.தே.க.வின் பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­துவம் 50 ற்குள் சுருண்டு போகலாம் என அர­சியல் அவ­தா­னிகள் குறிப்­பி­டு­கின்­றனர். அக்­கட்­சியில் காணப்­படும் உள்­வீட்டு முரண்­பா­டு­களும் இத­னையே தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

இந்த நிலை­யிலும் ஐக்­கிய தேசிய கட்­சியில் தொங்கிச் செல்­வ­தற்கே இந்த இரண்டு முஸ்லிம் கட்­சி­களும் முயற்­சி­க்கின்­றன. இதன் ஊடாக தங்கள் கட்­சி­களின் ஆச­னங்­களை அதி­க­ரித்­துக்­கொண்டு முஸ்லிம் சமூ­கத்தின் தானைத் தள­பதி எனும் பெய­ரினை சூட்­டிக்­கொள்ள குறித்த இரண்டு கட்­சி­களின் தலை­வர்­களும் தற்­போது நப்­பா­சை­ ­கொண்­டுள்­ளனர்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிடும் பட்­சத்தில் அதிக தேசியப் பட்­டியல் ஆச­னங்­களை பெற முடியும் என்ற நிலைப்­பாட்டில் இந்த முஸ்லிம் கட்சி தலை­வர்­களும் உள்­ளனர்.

எனினும், கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்மை கட்­சி­களின் ஆத­ரவே தங்­களின் தோல்­விக்கு காரணம் என ஐக்­கிய தேசிய கட்சி சார்­பான சிலர் குறிப்பிட்டு அடுத்த தேர்­தலில் அக்­கட்­சி­களை இணைந்­துக்­கொள்ள கூடாது எனவும் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் அக்­கட்­சியின் உயர்­பீடம், சிறு­பான்­மை­யி­னரை அர­வ­ணைத்­துக்­கொண்டே அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு முகம்­கொ­டுக்கும் நிலைப்­பாட்டில் இருக்­கின்­றது.

குறிப்­பாக, நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் முன்னாள் அமைச்சர் திகாம்­பரம் தலை­மை­யி­லான கட்­சிக்கு பாரா­ளு­மன்ற தேர்­தலில் அதிக இட ஒதுக்­கீடு வழங்கக் கூடாது என ஐக்­கிய தேசிய கட்­சியின் மாவட்ட அமைப்­பா­ள­ரான நவீன் திசா­நா­யக்க தற்­போது அடம்­பி­டிப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் பகி­ரங்­க­மாக விமர்­சித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதுபோன்ற நிலையே ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் ஏனைய சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­ட­வுள்­ளது. இதனால் தற்­போ­தி­ருந்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­மைத்­து­வங்கள் இது தொடர்பில் தீர்க்­க­மான முடி­வு­க­ளுக்கு வர வேண்­டிய கட்­டாயம் இருக்­கி­றது.

இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து கேட்­பதன் மூலம் சுமார் 10க்கு மேற்­பட்ட ஆச­னங்­களை நாட­ளா­விய ரீதியில் பெற முடியும் என கூறப்­ப­டு­வ­துடன் , பாரிய சக்­தி­யாக பாரா­ளு­மன்­றத்தில் செயற்­ப­டலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அது மாத்­தி­ர­மல்­லாமல் 1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­களின் ஆட்­சி­யினை அப்­போ­தைய முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் தீர்­மா­னித்தது போன்று பொது­ஜன பெர­மு­னவின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யினை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இந்த முஸ்லிம் கூட்­ட­மைப்பு செயற்­படும். அதே­வேளை, 19ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கை­யை 30க்கு மேல் அதி­க­ரிப்­ப­தற்கு தேர்­தலில் போட்­டி­யிட்டு ஆச­னங்­களை கைப்பற்றிய மற்றுமொறு கட்சியின் ஆதரவு தேவை.

இந்த சமயத்திலும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு தேவை ஏற்படலாம்.

இவற்றினை கருத்திற்கொண்டு இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரே அணியாக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது மாத்திரமல்லாமல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, தேசிய ஸூரா சபை போன்ற சிவில் அமைப்புகள் இந்த இரண்டு கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் எந்தவொரு முஸ்லிம் சிவில் அமைப்பும் இதுவரை கவனம் செலுத்தாமை கவலையளிக்கின்ற விடயாகும். தமிழ் மற்றும் மலையக கட்சிகள் தங்களுக்கிடையே காணப்படுகின்ற பிளவுகளை மறந்து சமூகத்திற்காக ஒற்றுமைப்பட்டு பாரிய வெற்றியினை ஈட்டியுள்ளது.

அது போன்று எமது இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் இன்னும் தாமதிக்காமல் தங்களின் சுய இலாபங்களை மறந்து சமூகத்தினை முன்னிலைப்படுத்தி ஒரே அணியாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க வேண்டும். இதன் ஊடாக முஸ்லிம் சமூகம் பல்வேறு வெற்றிகளை எதிர்காலத்தில் அடைய முடியும் என்பதற்கு வரலாற்று முன்னுதாரணங்களே சான்றாகும்.

SHARE