விஜய்
விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டைய கிளப்பு வருகின்றன. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
#AndhaKannaPaathaakaa lyric video is out ???
Thank you @thisisysr and @VigneshShivN 🙂@actorvijay @Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @XBFilmCreators @MalavikaM_ @SonyMusicSouth #Master
— Anirudh Ravichander (@anirudhofficial) March 23, 2020
விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.