இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மெசினாவில் உள்ள கிறிஸ்டோ ரே மேர்சிங் ஹோமில் சிகிச்சைபெற்றுவந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இருப்பினும் மருத்துவ அறிக்கைகள் வெளிவரும் வரை அந்த நபர் உண்மையில் கொரோனா வைரஸினால் இறந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியாது என இலங்கை துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.