உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டும் பலன்தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கெப்ரியசஸ் கூறுகையில்,
“கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் வைரசை அழிக்க இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல.
கொரோனா வைரசை ஒழிக்க இந்த நேரத்தைப் பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை” எனக் கூறியுள்ளார்.
மனித குலத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிவரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை மாய்த்துள்ளது.
மனிதர்கள் மூலமாக வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலைப் பின்பற்றுவதாலும் வைரசைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனினும் அந்த நடவடிக்கை மட்டும் முழுமையான பலனைத் தராது
இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.