இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் 5 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23,670 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.