ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பான பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் 011-2354550 – 0112354655 என்ற இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.