மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-கணபதிப்பிள்ளை மகேசன்

460

யாழில் தற்போது நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் எனவும், இக்காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் தமது தொழில் நிமித்தமாக வெளியில் செல்லும்போது சில இடங்களில் தடை விதிக்கப்படுவதாக அறியக் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அந்தந்தப் பிரதேச பிரிவுகளில் உள்ள பொலிஸ் பிரிவினருடன் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்தாலோசித்து முன்னெடுப்புக்களைச் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விவசாய நடவடிக்கை நிறைவடைந்துள்ள சில விவசாய உற்பத்திகளை அறுவடை செய்யவும் உரிய காலத்தில் விவசாயம் செய்யவேண்டிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுகுறித்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE