தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால், கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்ந்திருந்தது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124லிருந்து 234 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “வேண்டுகோளை ஏற்று ஒத்துழைத்து பரிசோதனைக்கு முன்வந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,103 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் 6 பரிசோதனை மையங்கள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளன. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதுவரை 190 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது” என்றார்.