பரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

448

பரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள பரீட்சைகள் குறித்த கலந்துரையாடல் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாக உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்தும் விதம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரச்சினை பெரும்பாலும் மே மாதம் வரை நீடிக்குமானால், பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE