நாடு முழுவதும் உள்ள 40 மையங்களில் 1,741 பேர் தனிமைப்படுத்தலில்

524

நாடு முழுவதும் உள்ள 40 மையங்களில் 1,741 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் மேலும் 155 பேர் கொண்ட ஒரு குழு இன்று (சனிக்கிழமை) வெளியேறியவுள்ளனர் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நேற்றுமட்டும் 288 பேர் தன்மைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடு திரும்பினர் என்றும் இதன் மூலம், மொத்தம் 2598 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மருதானையில் இருந்த 314 பேர் பூணானை தனிமைப்படுத்தல் மையத்திற்கு இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறினார்.

SHARE