தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்கு விலாசமில்லாத சில இணையத்தளங்களும், மக்கள் செல்வாக்கற்ற சிலரும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 117ஆவது ஜனன தினம் வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.