ஆகாயத்தில் விமானங்களுக்கு எரிபொருள் – விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

436
விமானங்கள் வானிலேயே எரிபொருளை நிரப்பிக்கொள்ளும் வகையிலான புதிய கண்டுபிடிப்பு சாதனையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.பொதுவாக நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், எரிபொருள் நிரப்புவதற்காகவே ஒரு சில விமான நிலையங்களில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்தக் குறையை போக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் புதிய ஆய்வில் ஆகாய விமான எரிபொருள் போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படி வானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்வது என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது என சிமுலேஷன் (Simulation) நிரூபித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதன் படி ஒரு விமானத்தில் எரிபொருள் மட்டும் நிரப்பப்பட்டிருக்கும். அந்த எரிபொருளைக் கொண்டு 5 விமானங்கள் வானில் பறக்கும் போதே நிரப்பிக் கொள்ள முடியும்.

இந்த அமைப்பில் எரிபொருளை நிரப்பிய விமானமானது, விமானங்கள் பறக்கும் பாதையில் பல்வேறு முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்.

பயணிகள் விமானத்திலிருந்து எரிபொருள் தேவைக்கான அழைப்பு வரும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானமானது, தான் நிறுத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து டேக் ஆப் (Take off) செய்து பயணிகள் விமானத்துக்கு கீழே பறக்கும்.

பின்னர் அந்த விமானத்தில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள் டேங்கிலிருந்து பம்ப் மூலம் பயணிகள் விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பும்.

அதன்பின் பயணிகள் விமானத்துடனான தொடர்பை முறித்துக்கொண்டு எரிபொருள் நிரப்பிய விமானம் பத்திரமாக தரையிறங்கும்.

இப்படி வானிலேயே எரிபொருளை நிரப்பி, ஜூரிச்சில் இருந்து சிட்னிக்கு எங்கும் நிற்காமல் விமானத்தை பயணித்து இதனை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இம்முறை ஏற்கனவே ராணுவ துறையால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தற்போது தான் பயணிகள் விமானத்தில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE