ஐந்து வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாருக்கு விளக்கமறியல்

321
வவுனியாவில் சிறுமையை 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்தச் சிறுவர் இல்ல மதகுரு தனது செட்டிகுளம், துடரிகுளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்தார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட யுவதியால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதிரியார் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டு நேற்று புதன்கிழமை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE