எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் பேரினவாதிகளின் சர்வதிகார பேச்சு செல்வம் எம்.பி காட்டம்

355

 

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் பேரினவாதிகளின் சர்வதிகார பேச்சு

செல்வம் எம்.பி காட்டம்

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.

சம்பந்தனுக்கு கிடைக்கவேண்டும் என்கின்ற கருத்தியலுக்கு முரண்பாடாக

போரினவாதிகள் வெளியிட்டு வரும் கருத்து சர்வாதிகாரபோக்கை வெளிக்காட்டுவதாக

உள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (2.4)

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் வரவதற்கு

காலம் கனிந்துள்ள நிலையில் அதனை தடுக்க பேரினவாதிகள் பெரும் பிரயத்தனங்களை

ஜனநாயகத்தை விரும்பிய தமிழர்கள் கால ஓட்டத்தில் போரினவாதிகளின் பலவாறான

அடக்குமுறைகளினால் ஆயுத போராட்டத்திற்கு தள்ளப்பட்டு மீண்டும் அகிம்சை

வழிக்கு தமிழர் ஈடுபடும் நிலை ஏற்றபட்டுபோது போரினவாதிகள் மீண்டும் தமது

கட்டுக்கடங்காத செயற்பாட்டை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு கூட

வாய்ப்பில்லையானால் அது ஜனநாயமாக கருத்தப்படாது என்பதே உண்மை.

ஆளுமையும் திறமையும் அரசியல் அனுபவமும் கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின்

தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவதற்கு பெரும்பான்மை பேரினவாதிகள்

தடையாக இருப்பது என்றும் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதனையும் எத்தீர்வும்

தமிழர்களுக்கு கிடைக்காது என்பதனையுமே மறைமுகமாக காட்டி நிற்கின்றது.

இவ்வாறன நிலை தமிழர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை அற்றதன்மையை உருவாக்க

கூடிய வாய்ப்புகளுக்கே வழிசமைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE