சுமந்திரனின் நியாயங்களை ஊடகங்கள் ஏன் எடுத்துக்கூறவில்லை? இனவாத ஊடகங்களின் அரசியல் பின்புலம் சிறப்பு பார்வை

526

அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனால் சிங்கள இனவாத ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணல் விவகாரம். குறித்த நேர்காணல் தொடர்பில் எழுந்தமாறளவில் அனைவரும் கருத்துக்கள் கூறியிருப்பதாக திரு. சுமந்திரன் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவிக்கும் கருத்தில் நியாயத்தன்மை இருந்தாலும் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்கள் ஒரு நியாயமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதன் மறைமுகமாக சுமந்திரன் அவர்கள் பிழை விட்டிருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நேர்காணலில் சுமந்திரன் அவர்கள் தனது சொந்த கருத்தையும் உள்ளடக்கி இருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் நேத்திரா டிவி ஒன்றிற்கு கடந்த நாளில் சுமந்திரன் அவர்கள் நேர்காணல் ஒன்றை வழங்கும் போது குறித்த ஊடகவியலாளர் கேட்ட கேள்வி இது தான். நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் தானே? அதற்கு ஆம் என்று பதிலளித்துள்ளார். அப்படியாக இருந்தால் நீங்கள் கூறுகின்ற கருத்து கூட்டமைப்பினுடைய கருத்து தானே? அதற்கு பதிலளித்த சுமந்திரன் கூட்டமைப்பின் கருத்தை தான் நான் வழங்க வேண்டும் அதை தவிர வேறு கருத்தை வழங்க முடியாது இவ்வாறு கூறிநிற்கும் பொழுது அவர் மனதில் ஆயுத போராட்டம் என்பது ஒரு விரக்தியை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது அதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனை அடிமனதில் உள்கொண்டு இக்கருத்தை தெரிவித்திருக்கிறார் என்பது மறைமுகமாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்கள் கூறியிருக்கின்றார்.
அரசியல் என்பது இன்று ஒரு கருத்து நாளை ஒரு கருத்து என்று கூறுவது தான். எந்த அரசியல்வாதியுமே தொடர்ந்தும் ஒரே கருத்தை கூற மாட்டார்கள். அரசியலின் கால நேரத்திற்கமைய கட்சி மாறுவதும் ஒருவரை விமர்சிப்பது போன்ற விடயங்கள் இடம்பெறும். சுமந்திரனை பொறுத்தவரையில் இலங்கையின் அரசியல் அத்தியாயத்தில் மிகவும் முக்கியமானவர் ஒருவர். சட்டத்துறையில் சிறந்து விளங்குபவர். இவரை அரசாங்கம் பயன்படுத்தலாம் பயன்படுத்தாமலும் விடலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல வழக்குகளில் வாதாடி வெற்றியும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த பொழுது அதனை மீளவும் கூட்டுவதற்கான நிலைமைகளை உருவாக்கினார். ஆனாலும் இவர் ஆயுத போராட்டத்தின் மீது வெறுப்பாக பேசுவது என்பது தேசியத்தை அழித்துவிடுவார் என்ற சந்தேகம் அனைவரிற்கும் இருக்கிறது. ஆனாலும் 2016 ஆம் ஆண்டு முதன்முதலாக இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று பாராளுமன்றத்தில் பேசுயுள்ளார். 20 ஆயிரம் பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியிருக்கின்றார். இவை ஒவ்வொன்றும் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தான். அரசியலில் மாற்றம் என்பது அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் எடுப்பதை இந்த இராஜதந்திரம் பல நாடுகளில் வெற்றியடைந்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் புலனாய்வு கட்டமைப்பில் கூட அரசாங்கத்துடன் இணைந்து தான் கொழும்பில் பல தாக்குதல்களை நடத்தியது. அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் போல் நடித்தாலும் அதனை தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள். சுமந்திரனை பொறுத்தவரையில் அவர் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொண்டுக்க வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவருடைய கருத்துக்கள் தான் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் செயற்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு இறுதி முடிவை எடுத்து அதற்கான தீர்வையும் பெற்றுக்கொடுப்பதில் சுமந்திரனுடைய பங்கு அழப்பறியது. தமிழினத்தின் மீது இனப்படுகொலை இடம்பெற்றது என்று ஒப்புக்கொள்ளும் சுமந்திரன் போராட்டம் பிழையானது என்று கூறுவது என்பது அல்லது அதற்கு பிழையான கருத்தை கொடுத்துள்ளார் என்பது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற செயற்பாடு என்று பொருள்படும். சுமந்திரன் பற்றி குறைகூறுவதற்கு மாவை சேனாதிராஜாவும் தமிழீழ விடுதலைப்புலிகளுமே அதற்கு தகுதியானவர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்து சரியானது. அதற்கு சுமந்திரன் அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும். சுமந்திரன் அவர்கள் வாய் பேச்சினால் மட்டும் கருத்தை கூறினாலும் ஏனையவர்கள் செயற்பாட்டினாலே போராட்டத்தை காட்டிக்கொடுத்து செயற்பட்டவர்கள். கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் இருக்கிறது. குறித்த சிங்கள ஊடகம் ஒரு இனவாத ஊடகம் என்று யாரும் சுட்டிக்காட்டவில்லை. அதனை யாழ்ப்பாணத்தில் பூதாகரமாக தமிழில் ஒளிபரப்பு செய்த கப்பிடல் டிவி மகிந்த ராஜபக்சவினுடைய அல்லது இனப்படுகொலையாளிகளின் கைக்கூலி ஊடகமாகும் என்பது அனைவரிற்கும் தெரிந்ததே. குறித்த கைக்கூலி ஊடகத்தின் ஒளிபரப்பை கேட்டு முதலில் கருத்து தெரிவித்தவர் டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன். இவர் தன்னை தேசியவாதி என்று கூறுவதற்கு தகுதியுடையவரா என்று ஒரு முறைக்கு இரண்டு முறை பரிசீலணை செய்து பார்க்க வேண்டும். விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டிருந்த போது காட்டிக்கொடுத்ததனாலே 450 க்கு மேற்பட்ட டெலோ கட்சி உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் அதன் தலைவர் உட்பட. இது சகோதரப்படுகொலை அல்ல காட்டிக்கொடுத்தமையால் தரப்பட்டதொன்று அது போன்றே ஏனைய பிளட், ஈ.பி.ஆர்.எல், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளும் உள்ளடக்கப்படும்.

சுமந்திரனுக்கும் ஆயுத போராட்ட வரலாறு தெரியாது என்று கூறிவிட முடியாது. ஆனால் கூட்டமைப்பின் இணைவு அதன் செயற்பாடுகள் தெரியாது என்று கூறப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஒன்று. ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக சுமந்திரன் அவர்கள் பல்வேறு மேடைகளிலும் பல்வேறு இடங்களிலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் பேசுயுள்ளார். ஆயுத கட்சிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கும் அரசாங்கத்தால் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கும் சுமந்திரன் அவர்களோ அல்லது சம்மந்தன் அவர்களோ, கூட்டமைப்பின் தலைவரோ, தமிழரசு கட்சியில் தலைவரோ பதில் கூறமுடியாது. இந்த கருத்தையும் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார். இந்த பேட்டியின் முக்கிய விடயம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய அடுத்த தலைவர் யார் என்பதை சிங்கள இனவாத ஊடகம் புறலியை கிளப்பி கூட்டமைப்பை பிளவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
தேசிய தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏதோ ஒரு வகையில் உடைத்து விட்டால் அதுவே அரசாங்கத்திற்கு பாரிய வெற்றியாகும். தமிழ் தரப்பும், அரசியல் தரப்பும் அரசியல்வாதிகளும் பிழைவிடாதவர்கள் என்று கூறிவிட முடியாது. மன்னிக்கப்பட முடியாத குற்றங்கள் செய்தும் தேசிய தலைவர் பிரபாகரன் மன்னித்து கூட்டமைப்பில் அனைவரையும் இணைத்துக்கொண்டார். டெலோ 2009 ஆம் ஆண்டிற்கு பிற்பாடே கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. அதற்கு முன்னர் இராணுவத்தினுடைய துணைக்குழுவாக செயற்பட்டது குறிப்பிடத்தக்கது. குறித்த 2 இனவாத ஊடகங்களும் கூட்டமைப்பை பிளவு படத்துவதில் மும்முரமாக செயற்படுகிறது. இவர்கள் நேரடியாக செயற்படுகிறார்கள் இன்னும் சில ஊடகங்கள் மறைமுகமாக செயற்படுகிறது. சுமந்திரனை குற்றவாளி என்று கூறுகின்ற அரசியல் விமர்சகர்கள் அதனை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழினத்தின் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வரிசையில் எவரும் தொடர்ச்சியாக செயற்பட்ட வரலாறு இல்லை. அவர்கள் அனைவரிற்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டையும் கூட மண்ணுக்குள் புதைந்து போய்விட்டார்கள். சுமந்திரனின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தமிழினத்திற்கு துரோகத்தனத்தை ஏற்படுத்துமாக இருந்தால் அவரும் ஏதோ ஒரு வகையில் கொலை செய்யப்படுவார். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தை செயல் வடிவில் காட்டிக்கொடுத்த கருணாவின் அன்றிருக்கும் நிலையையும் இன்றிருக்கும் நிலையையும் நாம் அவதானித்து பார்க்க வேண்டும்.

மது மாதுவிற்கு அடிமையாகாத ஒழக்கமான ஒரே இயக்கம் தமிழீழ இயக்கம் தான். அது போன்று தற்பொழுது அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுகின்றன. ஆயுதம் தாங்கியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதும் எமக்குத் தெரியும். இக்கட்டுரையை எழுதுகின்ற எனது வாதம் என்னவென்றால் சரிபிழைக்கு அப்பால் சுமந்திரனின் வாதத்தினையும் எடுத்துக் கூறுவதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை அக்கட்சியின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களே ஏற்றுக்கொள்கின்றார். அதன் கொள்கையுடன் இருக்கக்கூடிய கூட்டமைப்பின் இணைந்த கட்சிகள் ஆயுத செயற்பாட்டினூடாக இணைந்தவர்கள். குறித்த கூட்டமைப்பின் கொள்கை பரப்பாளராகவும் அதன் பேச்சாளராகவும் இருப்பவர் அக் கட்சியின் பிழைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊடகவாயிலாக சுட்டிக்காட்டி பேசப்படுவது ஏற்றுக்கொள்ளபட முடியாது. கொள்கை மாறி பேசுபவர்கள் ஊடக பேச்சாளர் பதவியில் இருப்பதும் தவறு. உலக நாடுகள் எங்கும் நியதி இதுதான். அவ்வாறு மாற்றுக்கருத்து கூறினால் அவர் சுட்டுக்கொல்லப்படுவார் அல்லது பதவியிலிருந்து விலக்கப்படுவார். சுமந்திரன் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்றால் மக்கள் தீர்ப்பு மகேஸ்வரனின் தீர்ப்பு என்பதுமால் போல் வரும் தேர்தல் ஒரு பாடத்தை கூறி நிற்கும்.

அவ்வாறானதொரு காலகட்டத்தில் சுமந்திரன் அவர்கள் அரசியலில் ஒரு நடைபிணமாக இருப்பார் என்பது தான் உண்மை. அவ்வாறே இன்றும் பல அரசியல் தலைமைகளுக்கு இடம்பெற்றிருக்கிறது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதில் குறிப்பாக கடந்த காலத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்களாக இருந்த காலகட்டத்தில் தேசியம் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக எந்தவொரு கட்டத்திலும் அவர்கள் தவறாக ஊடக அறிக்கைகள் கூறவில்லை. என்னை பொறுத்தவரை சுமந்திரன் அவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு ஊடக பேச்சாளராக கட்சியின் கொள்கையினை விளங்கிக் கொண்ட ஒருவரை நியமிப்பது சிறந்தது. குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையின்படி நாட்டுக்கொடியை ஏற்றுக்கொள்ள முடியாது, வடகிழக்கு இணைந்தது தான் தமிழர் தாயகம். தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும்.

போராட்டம் தான் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைவதற்கு காரணமாக அமைந்தது.
தமிழீழ தலைவர் பிரபாகரனால் ஆயுத போராட்டத்தை இறுதி வரை தமிழினத்தின் ஒரு குரலாக கொண்டு செல்லப்பட்டது. இனவாதத்தை சிங்களவர்கள் பார்த்தால் நாங்களும் பார்க்க வேண்டிவரும். அவர்களது கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்திருந்தால் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முற்றாக அங்கீகரிக்க வேண்டும். அந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் தான் தமிழனாக இருக்க முடியும் என்னும் கருத்து வெளிப்படையாக கூறப்பட்டிருந்தால் சுமந்திரன் அவர்கள் அடுத்த கட்டம் கைது செய்யப்பட்டிருப்பார். அதனை வைத்து சிங்கள ஊடகம் பிழைப்பு நடத்தியிருக்கும். ஆனால் சுமந்திரனின் உள்மனதில் நான் நினைக்கின்றேன் இவ்வாறான கருத்துக்களை தான் அவர் உள்ளே வைத்து பேசியிருப்பார் என்று நினைக்கின்றேன். எது எவ்வாறாக இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையினை நன்கு அறிந்தவரே ஊடக பேச்சாளராக இருப்பதற்கு தகுதியுடையவர். தமது சொந்த கரத்தை கூறுபவர்கள் ஊடக பேச்சாளராக இருப்பதற்கு தகுதியற்றவர்கள். சுமந்திரனுடைய அரசியல் நகர்வு உட்கொன்டும் அரசாங்கத்தை ஆட்டம் காட்டுவதாகவே அமைந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் அரசியலை பாதிக்கும் அளவில் இல்லை. தேர்தல் காலகட்டத்தில் ஒருவரை தாக்கி இன்னொருவர் மேலோங்கி வருவதற்கு கட்சிகளும் சரி அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்து வழக்கம் யாழில் செயற்பட்டுவரும் கபிடல் டிவி ஒரு அரசியல்வாதியை மையப்படுத்தி வளம் வருகின்ற டிவி. இவ்வாறு கீழ்தரமாக அரசியல் இலாபத்தினை பெறுவதற்கு செயற்படுகிறார்கள்.

சுமந்திரன் மீது அவர் அதிகபடியான வாக்கைபெற்று விடுவார என்ற அச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் சுமந்திரனுடைய கருத்தை இலாபகரமாக பயன்படுத்துவார்கள். என்னை பொறுத்தவரையில் சிங்கள இனவாத ஊடகங்களுக்கு எதிராகவும் அதனை பரப்புறை செய்யும் ஊடகங்களுக்கு எதிராகவும் தமிழ் தேசியவாதம் கொண்டவர்கள் மிக கவனமாக செயற்பட வேண்டும். இல்லையேல் தேசியம் குறித்த ஊடகங்களினால் மலுங்கடிக்கப்பட்டுவிடும் அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பை கூட்டும் கலைக்கப்பட்டு விடும். தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்னும் காரணத்தால் மக்கள் இன்னும் அதற்கு வாக்களிக்கின்றார்கள். இதனை விளங்கிக்கொண்டால் சரி.

SHARE