அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாகச் செயற்படுகிறது என்று குற்றம் சாட்டி, 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கல்முனையில் இன்று சனிக்கிழமை அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

389

 

அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாகச் செயற்படுகிறது என்று குற்றம் சாட்டி, 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கல்முனையில் இன்று சனிக்கிழமை அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது. கல்முனை புதிய நகர திட்டத்தை உடன் ஆரம்பிக்க வேண்டும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தமான குடிதண்ணீர் இன்றி இருக்கும் கல்முனைக்குடி பிரதேசத்துக்கு குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தவேண்டும், சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சவூதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் பயனாளிகளிடம் உடனடியாக கையளிக்கப் படவேண்டும் போன்ற 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தே இந்த அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது அங்கு சென்ற பொலிஸார், உண்ணா விரதத்தை கைவிடுமாறு கோரியதற்கிணங்க அரசாங்க அதிபருக்கு மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டு போராட்டம் 10.30 மணியளவில் கைவிடப்பட்டது

poraddam fff9688476

image_handle

SHARE