41 தொகுதிக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

965
மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் 41 தொகுதிகளிலும் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

41 தொகுதிகளுக்கும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப் கொடுக்கும் பணி நடைபெறும். 12–ந்தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாரணாசி தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இறுதி கட்ட தேர்தல் நடக்கும் 41 தொகுதிகளில் 601 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் உத்தரபிரதேசத்தில் உள்ள 18 தொகுதிகளில் அதிகபட்சமாக 325 பேர் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததால் வாரணாசி தொகுதியை அல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிரப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வெளியேறினார்கள்.

SHARE