வழுக்கைத் தலையர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி: டோக்கியோ உணவகம்

626

 

ஜப்பானின் அகாசகா மாவட்டத்தில் உள்ள ஜப்பானிய பாணி உணவகம் ஒன்று வழுக்கைத் தலையர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புத் தள்ளுபடியை அளித்து வருகின்றது. தலை வழுக்கையாவது என்பது மேற்கத்திய நாடுகள் அளவிற்கு ஜப்பானில் காணப்படாவிட்டாலும் 26 சதவிகித மக்கள் அங்கும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றார்கள் என்று அந்நாட்டின் முன்னனி சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான அடேரன்ஸ் குறிப்பிடுகின்றார்.இந்த மாற்றத்தில் மரபியல் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்போதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை அழுத்தமும் வலுவான காரணியாக அமைந்துள்ளது. தலை வழுக்கை என்பது இங்கு சந்தேகத்திற்குரிய ஒரு பிரச்சினையாகக் கருதப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில் பிரபலமான நடிகர்களே தங்கள் வழுக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் பெருமையுடன் தங்கள் பணியை செய்கின்றனர். அதனால் ஜப்பானிலும் அத்தகைய மனப்பக்குவத்தை ஊக்குவிக்க தான் விரும்பியதாக இந்த உணவகத்தின் உரிமையாளர் யோஷிகோ டொயோடா குறிப்பிட்டார்.

உதவும் கரங்கள் என்ற அர்த்தம் வரும் ‘ஒடசுகே’ உணவகத்தின் முக்கிய குறிக்கோள் இத்தகையோரின் மன அழுத்தத்தைத் குறைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆராம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நடுத்தர வயதுக்காரர்கள் தங்களுக்கு குறைவான விலையில் சுவையான உணவுகள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர். சம்பளத்திற்காக கடுமையாக உழைப்பவர்களுக்காக இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் டொயோடா கூறினார்.

அந்த உணவகத்தின் சுவர்களிலும் வழுக்கை பற்றிய செய்திகளே இடம் பெற்றுள்ளன. உலகிலேயே அதிகளவு வழுக்கைத்தலையர்கள் வசிக்கும் நாடு என்ற கேள்விக்கு 43 சதவிகிதத்துடன் செக்கோஸ்லாவாகியா தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி போன்ற தகவல்களும், ‘வழுக்கையாக இருப்பதில் பெருமை கொள்’ போன்ற ஊக்குவிப்பு வாசகங்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வழுக்கைத்தலையருக்கும் தள்ளுபடி அளிக்கப்படுவதுடன் குழுவாக செல்லுபவர்களுக்கும் சிறப்புத்தள்ளுபடி கிடைக்கின்றது என்பதுவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE