ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் –  அகில

335
ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தியும் சட்டவிரோதமான முறையில் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் என்ற ரீதியில் பௌதீக அபிவிருத்தியை விடவும் பண்புசார் அபிவிருத்தியை ஏற்படுத்தவே நாம் முனைப்பு காட்ட வேண்டும்.

நான் தைரியமாக சொல்கின்றேன், கார்ல்டன் பாலர் பாடசாலைகளிலிருந்து ஆயிரக் கணக்கான மாணவர்கள் தேசிய பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

முழுக்க முழுக்க அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைகளின் முகவரிகளைப் பயன்படுத்தியும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் சட்டவிரோதமான நடவடிக்கைகளாகும்.

நாம் இந்த அனைத்து முறைமைகளையும் மாற்றியமைக்க வேண்டும். இதன் காரணமாகவே அரசியல் தலையீடுகள் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்க்க எமது அமைச்சு தீர்மானித்துள்ளது என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்ற கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE