கங்கனாவின் ஆபாச போஸ்களால் இந்திய பெண்கள் அமைப்பு எதிர்ப்பு  

654

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத் இப்போது இந்தியில் பிசியான நடிகை. அவ்வப்போது எதையாவது சொல்லியோ, செய்தோ பரபரப்பை கிளப்புகிறவர். அவரது லேட்டஸ்ட் பரபரப்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் கொடுத்துள்ள ஆபாச போஸ்கள்.
               டூ பீஸ் உடையில் சிகரெட்டை ஊதி தள்ளுவது போன்றும், மது அருந்துவது போன்றும் அவர் கொடுத்துள்ள போஸ்களால் பத்திரிகை மளமளவென்று ஒரு புறம் விற்றுக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் மும்பை பெண்கள் அமைப்புகள் கங்கனாவுக்கு எதிராக கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன.
                                   இதுகுறித்து மும்பை பெண்கள் அமைப்பு ஒன்று விடுத்துள்ள அறிக்கையில், “நடிகைகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்க கூடாது. அவர்களுக்கு சமூக பொறுப்பும் வேண்டும். பணத்துக்காக கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. கங்கனாவின் ஆபாச போஸ்களால் இந்திய பெண்கள் அனைவருமே இப்படித்தான் என்கிற இமேஜ் சர்வதேச அளவில் உருவாகும். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
07-kangana-ranaut-smokes-600
SHARE