கோத்தா கொலை முயற்சி பழிவாங்க்கப்பட்ட தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

620

 

கோத்தபாயாவை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல்க்கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் ஈற்றில் வியாழன் அன்று நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இக்காலப்பகுதியில் வேறு அவர் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். ஒரு தமிழ் இளையவனின் வாழ்வியலை அநியாயமாக அழித்து அவனை செய்யாத குற்றத்திற்காக இவ்வாறு தண்டித்தமைக்கு சிங்களத்தில் யார் முதலில் பொறுப்பேற்க்கப் போகிறார்கள்? நான் இங்கு முதலில் என்றே குறிப்பிட்டேன். அதை செய்ய வேண்டிய பட்டியலில் பலர் உள்ளனர். இருக்க விடுதலை என மட்டும் அறிவிக்கும் நீதிமன்றங்கள் நட்டஈடு உட்பட இதற்கான பரிகாரங்கள் எதுவும் குறித்து வாழா இருப்பது ஏன்? தமிழர் என்ற அசமந்தப் போக்கா?

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு 2018 யூலையில் சைவ மதக்குரு சிறீஸ்கந்தராசா 13 வருடங்களின் பின்னர் குறிற்றவாளியல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இதே குற்றத்திற்காக விடுதலை செய்யப்பட்டார் என்பது இங்கு வலியுறுத்த வேண்டிய விடயம். இருவர் விடயத்திலும் அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர்கள் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட்னர். தாங்கள் வழங்கிய வாக்குமூலம் தாம் சுயாதீனமாக வழங்கியதல்ல என இருவரும் தெரிவித்ததை அடுத்து மேற்கொண்டு எவ்வித தடயங்களையோ சாட்சியங்களையோ வழங்கத்தவறிய நிலையிலேயே இவ்விடுதலைகள் நிகழ்ந்துள்ளன. அவ்வாறாயின் அதற்கு ஏன் முறையே 13 மற்றும் 14 வருடங்கள் சிறீலங்கா நீதித்துறைக்கு தேவைப்பட்டது? இருக்க ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்ட இருவரையும் ஒன்றாக விடாது ஏன் ஒரு வருடம் 5 மாதங்கள் இடைவெளியில் விடுதலை செய்ய வேண்டும்? உலகமே ஏற்றுக் கொண்ட இலங்கைத்தீவில் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதி தான் மீண்டும் காரணமா?

இருக்க இங்கு இன்னுமொரு விடயத்தையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருதல் அவசியமாகிறது. கோத்தா மீது 2006 டிசம்பர் 1ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்பட்ட விடயம் குறித்து கோத்தாவின் நெருங்கிய சகாவும் அப்போதைய இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா 2016 மே இல் பாராளுமன்றத்தில் பேசும் போது இவ்விடயம் குறித்து பெரும் குண்டொன்றைத் தூக்கிப் போட்டார். அவர் சொன்னார் கோத்தபாயா மீதான தாக்குதல் உள்ளக வேலை. ராஜபக்ச குடும்பம் மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்கும் வகையிலேயே கோத்தபாயவினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதே அத் தாக்குதல் என்றார். 25 மீற்றருக்கு தள்ளி வைத்து யாராவது குண்டை வெடிப்பார்களா? என வேறு போட்டுடைத்தார். அவ் குண்டு வெடிப்பில் கோத்தா எவ்வித பெரும் காயங்களுக்கும் ஆளாகவில்லை.

இச்சம்பத்தைக் காரணமாகக் காட்டி புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்குமாறு நோர்வேயைப் பணித்த ராஜபக்ச தரப்பு, பின்னர் போர் நிறுத்தத்தில் இருந்து வெளியேறி இராணுவ நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர் என்பது வரலாறு. ஆகமொத்தத்தில் தம் சிங்கள மக்களை அணிதிரட்டவும், சர்வதேச சமூகத்தை ஏய்க்கவும் ஆடிய நாடகத்தில் அவர்கள் அனைவரும் பலியானது மட்டுமன்றி, அதை நிஜமெனக்காட்ட பலியாக்கப்பட்ட தமிழர்கள் தற்போது என்னவாகியிருக்கிறார்கள் என்பது மேலும் ஒரு துன்பியல் நிகழ்வு.

சோழியன் குடுமி சும்மா ஆடாது

‘குதிரை ஓடியபிறகு லாயத்தை மூடிய கதை’யாக, மக்களை அணி திரட்டும் பணியில் கூட்டமைப்பு களமிறங்கப்போகின்றதாம். ‘எமது இனத்திற்கு விரோதமாக இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு தமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தயாராக வேண்டும்’ என தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளிர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. அங்குதான் புற்றுக்குள் இருந்து வெளியே வந்து சீறும் பாம்பாகச் சீறியிருக்கின்றார் மாவையர் இனமழிந்த கடந்த பத்து வருடங்களாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது மக்களை அணிதிரட்டி ஏதோ வெட்டிக்கிழிக்கப்போவதாக மாவையர் திருவாய் மலர்ந்தருளியிருப்பது, தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்திலல்ல, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலையும் வெற்றிபெற்று அரியாசனத்திலை அமரவேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்புத்தான்.

அதுசரி, சோழியன் குடுமி சும்மா ஒன்றும் ஆடாது.

*************

கத்துக்குட்டியின்வரலாற்றுத் திரிப்பு….

தமிழர்கள் வாழ்ந்த தேசம் தமிழீழம். அந்தத் தேசத்தை மீட்பதற்குத்தான் தமிழ் மக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடினார்கள். அளப்பரிய தியாகத்தை செய்திருக்கின்றார்கள். ஆனால், சிங்களவர்களுடைய நாட்டில் தமிழீழம் கேட்பதுபோன்று அரசியல் கத்துக்குட்டி எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார். இலங்கை தமிழரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதுதான் அவர் இதனைச் சொல்லியிருக்கின்றார்.

அவர் சொன்னதை நீங்கள் ஒருக்கா வடிவாகக் கேளுங்கோ… ‘‘நீங்கள் எங்களையும் உங்கள் தேசத்தில் உள்வாங்கி எமக்கும் உரிய உரிமைகளை வழங்கி வாழ விருப்பமில்லை என்று சொன்ன காரணத்தினாலே எங்களை தனியே போகவிடுங்கள் என்ற தீர்மானத்தினை வட்டுக்கோட்டையில் நாங்கள் நிறைவேற்றினோம்’’ என்று சொல்லியிருக்கின்றார்.

தமிழினத்தின் வரலாறு தெரியாத ஒருத்தரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நுழைக்கும்போதே, எதிர்காலத்தில் தமிழர்களை நாசமாக்கவே நுழைக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தது.

கொடுத்த வேலையை சுமந்திரன் கனகச்சிதமாகவே செய்துகொண்டிருக்கின்றார்.

அதுசரி, கொடுத்த காசுக்கு கூவத்தானே வேணும்.

*************

வரலாறு, போராட்டம், கொள்கை தெரியாத கூட்ட(மைப்பு)ம்இலங்கைத் தீவில் தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதில் விடுதலைப் புலிகள் மிக உறுதியாகவே இருந்தார்கள். ‘தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல’ என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் இந்தக் கோட்பாடுகள் தெரியாமல் வேற்றுக்கிரகத்தில் இருந்துவந்தவர்களைப்போல், தமிழ் மக்களை சிறுபான்மை இனமாக்குவதில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. கடந்த வாரம் கைதடி வினாயகர் முன்பள்ளி பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ .சரவணபவன் தமிழ் மக்களை சிறுபான்மை இனம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் வரலாறு, போராட்டம், கொள்கை எதுவும் தெரியாத இவர்கள் எல்லாம் எப்படித்தான் கூட்டமைப்பிற்குள் நுழைந்தார்களோ..?

‘‘எங்களுடைய முழு உரிமையை பறிக்கும் செயல் இந்த தேசிய கீதப் பிரச்சனை, ஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது. அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள், அப்போ நாங்கள் வந்தேறு குடிகள்,அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். சிறுபான்
மையினம் தாங்களே ஒரு தேசியகீதத்தை உருவாக்கி படிக்கட்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியாது’’ என்று சரவணபவன் ஆதங்கப்பட்டிருக்கின்றார்.

அதுசரி, வேலியே பயிரை மேயும்போது, மாட்டுக்கடித்து என்ன பயன்?

காணாமல் ஆக்கப்பட்ட என்னுடைய பிள்ளையென சிங்கள மொழி பேசும் பிள்ளையை காட்டினார்கள்! ஜெயவனிதா

#Vavuniya #Colombo
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே இரண்டாம் மாடி விசாரணைக்கு அழைத்திருந்தார்கள் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1060 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இரண்டாம் மாடி விசாரணைக்காக நானும் என்னுடைய கணவரும் போயிருந்தோம். உங்களுடைய பிள்ளை இதுதானா எனக் கூறி ஒரு ‌பெண் பிள்ளையை காட்டினார்கள்.

இது என்னுடைய பிள்ளை இல்லையென்று கூறி மறுத்தேன். இல்லை நீங்கள் படத்தில் காட்டும் பிள்ளை தான் இந்த பிள்ளை எனக் கூறினார்கள்.

என்னுடைய பிள்ளைக்கும் நீங்கள் காட்டும் பிள்ளைக்கும் வித்தியாசம் உள்ளது. இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பொலன்னறுவையிலிருந்து சிங்கள மொழி பேசுகின்ற பிள்ளையை கொண்டுவந்திருந்தார்கள்.

எங்களுடைய பிள்ளைகள் தமிழ் பேசும் பிள்ளைகள். இதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறி நான் முற்றுமுழுதாக மறுப்பு தெரிவித்திருந்தேன்.

இந்த பிரச்சினையை இத்தோடு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதுதான் நாங்கள் இவ்வளவு காலமும் எடுத்த முடிவு. இன்றைக்கு தான் எங்களுக்கு கையில் பிள்ளை கிடைத்திருக்கிறது. அதனால் தான் நாங்கள் இன்று உங்களை விசாரணைக்கு கூப்பிட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் பிரச்சினையை முடிக்கலாம். ஆனால் என்னுடைய பிள்ளையென கூறி பிரச்சினையை முடிக்க வேண்டாம் என கூறியிருந்தேன்.

படத்தில் இருப்பது என்னுடைய பிள்ளை. ஆனால் நீங்கள் கொண்டு வந்து காட்டிய பிள்ளை என்னுடையதில்லை. படத்தில் இருப்பது தான் என்னுடைய பிள்ளை என உறுதியாக கூறியிருந்தேன்.

இப்போது அவர்களுக்கு எங்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்கிறது தான் அவர்களுடைய நோக்கமாகவுள்ளது.

நீங்கள் தான் காணாமல் போன சங்கத்தின் தலைவியா என என்னிடம் கேட்டிருந்தார்கள். நான் ஓமென கூறியிருந்தேன். நான் என்னுடைய பிள்ளை மட்டும் தான் காணாமல் போனதென கேட்கவில்லை. எல்லா தாய்மார்களுடைய பிள்ளைகளையும் தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

என்னுடைய பிள்ளைக்காக மட்டும் நான் குரல் கொடுக்கவில்லை. எல்லோருடைய பிள்ளைகளுக்காகவும் தான் குரல் கொடுக்கின்றேன். என்னுடைய பிரச்சினையை முடிக்கவும் இயலாது.

போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்களுக்கு எங்களுடைய தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுப்போம். நாங்கள் உண்மையாக வெளிநாடுகளை தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய பிள்ளைகளிற்கு சரியான ஒரு தீர்வு கிடைப்பதாக இருந்தால் வெளிநாடுகள் தான் வரவேண்டும்.

நேற்றைய விசாரணையின் போது அவர்களிடமும் நான் அதனை கூறியிருந்தேன். வெளிநாடுகள் வந்து எங்களுடைய பிரச்சினையை முடிப்பதாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம் என கூறியிருந்தேன். நீங்கள் சரியான முறையில் பிரச்சினையை முடிக்க மாட்டீர்கள்.

இவ்வாறு எல்லோரும் தனித்தனியாக இருந்தால் ஒவ்வொருவராக விசாரணைக்கு கூப்பிட்டு எங்களுடைய போராட்டங்களை மளுங்கடிக்க செய்துவிடுவார்கள். எல்லா தாய்மாரும் ஒன்றாக இணைந்து வெளிநாட்டினுடைய உதவியை கேட்பதாக இருந்தால் இரண்டு, மூன்று மாதங்களில் தீர்வினை பெறமுடியும்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் சேர்த்தே நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.தமிழருடைய பிரச்சினை தீரவேண்டும்.

நானும் ஒரு தமிழன் தான் எங்களுடைய பிரச்சினை தீர்ந்தால் தான் முற்றுமுழுதாக இலங்கையில் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்விற்கு சமன்.

மழுங்கடிக்கும் நோக்குடனே இந்த விசாரணை பிரிவிற்கு ஒவ்வொருவரையும் கூப்பிடுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள தனது மகள் எங்கே ; ஜெயவனிதா கேள்வி
October 30, 2016
makil-600×415இறுதிக்கட்ட யுத்த்தின் போது காணாமல் போன நிலையில் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில்காணப்பட்ட தனது மகள் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவே உரிய பதிலை வழங்கவேண்டும் என காணாமல் போன காசிப்பிள்ளை ஜெரோமியின் தாய் காசிப்பிள்ளை ஜெயவனிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்ட காசிப்பிள்ளை ஜெயவனிதா ஒருமுறையாவது தமது மகளை காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்த்தின் போது 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி இரட்டை வாய்க்கால்பகுதியில் வைத்து தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமிகாணாமல் போனதாக அவரது தாய்காசிப்பிள்ளை ஜெயவனிதா காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதிஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலுக்காக வெளியிடப்பட்ட நூறுநாட்களில் புதிய நாடு என்ற துண்டுப்பிரசுரத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் தனது மகள்காசிப்பிள்ளை ஜெரோமி நிற்பதை தாம் கண்டு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய போதிலும் தனது மகள்தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போன தனது மகள் தொடர்பில் பல ஆணைக்குழுக்களும், புலனாய்வு பிரிவினரும்விசாரணைகளை மேற்கொள்கின்ற போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லையென கவலைவெளியிடும் வனிதா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவே தனது மகள் தொடர்பில் உரிய தீர்வைவழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, காணாமல் போயுள்ள தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமிக்கான அவரது தாய் காசிப்பிள்ளை ஜெயவனிதா கவிதை ஒன்றையும் எழுதி பாடியுள்ளார்.

இதேவேளை, மன்னார் மடு பகுதியில் வைத்து காணாமல் போன தனது மகள் நாகஜோதி நாகராசா ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்பட்ட போதும் ஜனாதிபதி விடுதலை செய்யாமைக்கான காரணம் என்னவென்று அவரது தாயார் திருமதி நாகராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

SHARE