பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

341

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரச நியமனங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சுதந்திர தினத்தன்று ஒரு சில தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்திருக்கலாம் என்ற கூட்டமைப்பின் குற்றச்சாட்டடை பிரமதர் ரணில் ஏற்றுக்கொண்டதோடு, அவர்களின் விடுதலை தொடர்பாக தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தாம்  எடுப்பதாகவும் இதன்போது பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மேலும் மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரச அதிபர் நியமனங்களின் போது சிவில் மற்றும் தமிழ் அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்ற கூட்டமைப்பின் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாண, மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாக அந்தந்த மாவட்டங்களின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் கூட்டமைப்பு இதன்போது முன்வைத்துள்ளது.

இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்காளன சுமந்திரன், சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராஜா மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE