அரசாங்க அதிபர் என்.வேதநாயன் -மாங்காய் மடையன் அல்ல என்று நினைத்துவிடகூடாது என்பதற் இப்படி சொல்லியிருக்கலாம்

368

 

யாழ்.குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் யாழ்.செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஊடகவியலாளர்களினால் பல குழப்பங்கள் உருவாகின்றன என்பதனாலேயே தாம் அனுமதி மறுத்ததாக அரசாங்க அதிபர் என்.வேதநாயன் தெரிவித்துள்ளர்.

மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் ந ண்பகல் 12 மணிவரையில் நடைபெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள் சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் செய்தி சேகரிப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்றிருந்த நிலையில் கேட்போர் கூடத்திற்குள் செல்லவேண்டாம். எனவும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு அனுமதி இல்லை என தெரிவித்தவர்கள் யார்? என வினவியபோது ஆளுநர் அந்த உத்தரவை வழங்கியதாக மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் விடயம் தொடர்பாக கலந்துரையாடல் நிறைவடைந்ததன் பின்னர் ஆளுநரின் செயலாளர் இளங்கோவனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான அறிவுறுத்தல் எதனையும் நாங்கள் வழங்கவில்லை. என அவர் அடியோடு மறுத்திருந்தார்.  மேலும் ஆளுநர் தடுத்ததாக கூறியவர் யார்? எனவும் இளங்கோவன் கேட்டிருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம். என ஊடகவியலாளர்களுக்கு கூறியவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அந்த விடயத்தை மறைக்க முற்பட்டார்.

பின்னர் யாழ்.அரசாங்க அதிபரை நேரில் சந்தித்து ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அவ்வாறான உத்தரவை தானே கொடுத்ததாகவும், ஊடகவியலாளர்களினால் பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகின்றது.

எனவே பல தரப்புக்கள் இணக்கப்பாட்டுடன் பேசிக் கொள்ளும் இந்தக் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளக் கூடாது என நினைத்தே உத்தரவை வழங்கியதாகவும் கூறியதுடன் கலந்துரையாடல் நிறைவின் பின்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக தெரிவிக்கலாம். என தாம் எண்ணியிருந்ததாகவும் அவர் விளக்கினார்.

அவ்வாறெனில் ஊடகவியலாளர்கள் குழப்பவாதிகளா? என மீண்டும் கேட்டதற்கு அதனை அப்படியே அரசாங்க அதிபர் விழுங்கி விட்டு அமைதியாக இருந்தார். என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

SHARE