‘வெற்றி வேலா’ பெற்றோர்களை எதிர்த்து போராடும் காதலர்கள் கதை

640

பெற்றோர்களை எதிர்த்து போராடும் ஒரு காதல் ஜோடியை கருவாக வைத்து, ‘வெற்றி வேலா’ என்ற படம் தயாராகி இருக்கிறது. ராம்தேவ், அமலா சுமன் ஆகிய இருவரும் கதாநாயகன்–கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். சஞ்சய் கண்ணன்–புவனா சரவணன் ஆகிய இருவரும் இன்னொரு நாயகன்–நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் பாலாசிங், மதன்பாப், பாண்டு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அஸ்வத்–அஜய் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க, ஜோ பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன்: எல்.பிரபுராஜா. படப்பிடிப்பு ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.

SHARE