தமிழீழ விடுதலைப்புலிகளும், பயங்கரவாதத் தடைச்சட்டமும்   

874

உலக வரலாற்றில் தமக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதி நிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இலங்கையில் இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீதான இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ்த் தரப்புக்களோ ஈடுபடவில்லை என்பதே இன்றைய நிலைப்பாடு.

சர்வாதிகார நாடுகள் இலங்கை தேசத்திற்குள் கால்பதித்து தமது நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இந்த நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் அந்நிய சக்திகள் இந்த நாட்டுக்குள் தமது காலணித்துவத்தை கொண்டுவர முடியாமல் போனது. குறிப்பாக 30 ஆண்டுகள் வடகிழக்கை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது மட்டுமல்லாது கடல், வான், தரை என்று 58 கட்டமைப்புக்களை தமது வசம் வைத்திருந்தனர். அதனூடாக நீதி நிர்வாகத் துறையும் சமமாகவே செயற்பட்டது.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டி ருக்கின்ற பூகோள அரசியலை எடுத்துக்கொண்டால் மிகவும் ஒரு குழப்பகரமான நிலைப்பாட்டையே நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளை 45 நாடுகள் தடை செய்திருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவினுடைய தடை என்பது விடுதலைப்புலிகளினுடைய அரசி யல் மீள் உருவாக்கத்திற்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பென்டகனில் செப்டம்பர் 11இல் இடம்பெற்ற இரட்டை கோபுரத்தாக்குதல் என்பது உலகத்தில் இருக்கக்கூடிய ஆயுத போராட்ட குழுக்களை ஒரு தீவிரவாதமாகவே  கணிப்பிட்டு குறித்த நாடுகளின் உதவியோடு அவற்றை அமெரிக்கா தடை செய்தது. இதில் ஹமாஸ், லக்சரிதொய்பா, பலஸ்தீன விடுதலை இயக்கம், அல்-கைதா, தமிழீழ விடுதலைப்புலிகள் என 38 புரட்சி அமைப்புக்கள் தடை செய்யப்பட்டது. இத்தனை புரட்சி அமைப்புகளிலும் முதன்மை தாங்கிய அமைப்பாக தமி ழீழ விடுதலைப்புலிகள் இருந்தனர். இத்தனை அமைப்புகளிலும் தமி ழீழ விடுதலைப்புலிகளினுடைய கோரிக்கை என்பது தமிழ் மக்களுக்கான வடகிழக்கிணைந்த ஒரு தாயகம் என்பதேயாகும். அந்த தாயகத்திற்கான போராட்டமே இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டு காலமாக இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளோடு ஆயுதம் ஏந்தி போராடிய அல்லது அக்கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற ஆயுதக் குழுக்களுக்கு இந்த நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் இல்லை. அவர்களுடைய நினைவு தினங்கள் எந்தவித தடையுமின்றி இடம்பெறுகிறது. ஆனால் விடுதலைப்புலிகளில் போராடி இறந்தவர்களுக்கு நினைவு கூறக்கூடாது என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. உதாரண மாக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரிழந்த தியாகி திலீபன் அவர்களை நினைவு கூறக்கூடாது என்று நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அந்த நினைவு தினம் கைவிடப்பட்டது. இருந்தும் மறைமுகமாக தியாகி திலீபனுடைய நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆகவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய      தொரு பிரச்சினைகளைத் தோற்று வித்துள்ளது. இதுவரையில் இந்த மண் மீட்கும் போராட்டத்தில் 50 ஆயிரம் தமி ழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் வீரர்கள் வித்தாகியுள்ளார்கள். 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய தியாகங்களை எவருமே அனுசரிக்கக்கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடானது இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்றதொன்று இருப்பதே பிரதானமான காரணமாகும். தமிழ்த் தரப்பில் இருக்கக்கூடிய சட்டத்தரணிகள் தமி ழீழ விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியயும். வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சட்டத்தரணிகள் அந்தந்த நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அதற்கான வாத, பிரதிவாதங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதிலொரு கட்டமாக பிரித்தானிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. அவர்கள் சுதந்திரமாக தமது அரசியல் நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்வதற்கு அனைத்து வசதி வாய்ப்புக்களும் எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஏனைய இயக்கங்களை போன்று ஏனைய நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் உள்ளவர்களைப் போன்றவர்கள் அல்ல. ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள். இதுவரையிலும் விடுதலைப் புலிகளுடன் சர்வதேச ரீதியாக 7 பேச்சுவார்த்தைகளும், 14 உள்ளுர் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இதில் உலகில் அதிகாரமிக்க அனைத்து நாடுகளும் தொடர்புபட்டிருக்கின்றது என்பதுதான் மிக முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆகவே இந்த நாட்டில் தமி ழீழ விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை, பயங்கரவாதத் தடையை நீக்குவதற்குத் தேவை யான கடமைகளைச் செய்ய தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் முன்வர வேண்டும். இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் அவ்வாறானதொரு வழக்கை தாக்கல் செய்வதனூடாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இத்தடையை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் ஒரு செயற்பாடு இந்த நாட்டில் உருவாக்கப்படும்.

சர்வதேச நாடுகளினுடைய அழுத்தங்களில் இருந்து இலங்கை தப்பித்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் (குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா) இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் அவசியமாகிறது. சர்வாதிகார நாடுகளின் பிடியிலிருந்து இலங்கை மீட்சிபெற வேண்டுமாக இருந்தால் விடுதலைப் புலிகளினுடைய தந்திரோபாயங்கள் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லாது போனால் சீன ஆதிக்கத்தை, இந்திய ஆதிக்கத்தை, அமெரிக்க ஆதிக்கத்தை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்க முடியா மல் போகும். கடந்த காலங்களை விட தற்போது இந்நாட்டில் இவ் நாடுக ளின் செல்வாக்கு இன்னுமின்னும் அதிகரித்திருக்கிறது.   இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழினத்தின் மீது இனப்படுகொலை மேற்கொள்வதற்கு மேற்குறிப்பிடப்பட்ட 3 நாடுகளும் ஆயுத ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்கள். அதற்கு மாற்றீடாகவே இலங்கை அரசாங்கம் இந்த நாடுகளுடன் கைகோர்த்துச் செயற்படுகிறது. தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய தமி ழீழ விடுதலைப்புலிகளுடன் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையினூடாக, சர்வதேச மத்தியஸ்தத்தின் ஊடாக இந்த ஆயுதப் போராட்டத்தை மழுங்கடித்தார்கள். அதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆகவே தமிழினம் இன்னமும் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாத சூழ்நிலை இந்த அரசாங்கத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள மயமாக்கல், நில ஆக்கிரமிப்பு, கரையோரச் சிங்களவர்களின் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாற்றுத்திருமணம் என்ற போர்வையிலும், இராணு வப் படையணியில் சேர்க்கின்ற போர்வையிலும் தமிழ் மக்களை மீண்டும் ஒரு அடிமைத்தனத்திற்குள் இந்த இலங்கை அரசு கொண்டு செல்ல முயற்சிக்கின்றது. அதற்கான அனைத்து இரகசியத் திட்டங்களும் தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பா.உ அங்கஜன், கருணா, பா.உ பிள்ளையான் போன்றவர்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய தன்மானத்தை விற்றுப்பிழைக்கின்ற செயல் வடிவம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தமிழீழ கோரிக்கையை தமிழ் மக்கள் மறந்தவர்கள் என்றும் கூறியிருந்தார். அவர் கூறியதைப்போல தமிழ் மக்கள் மறந்துவிடுவதற்கு முட்டாள்கள் கிடையாது.

ஆகவே இவர்களுடைய நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் தமிழ் மக்களுடைய தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற நிலைப்பாட்டில் இருந்து தமிழினத்தை பிரிக்கின்ற ஒரு செயற்பாடாகவே அமையப்பெற்றிருக்கின்றது. ஆகவே தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்காகவே எமது அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கூறுகின்ற தமிழ் அரசியல் தலைமைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதனூடாகவே தமிழீழ விடுதலைப்புலிகளை ஒருங்கிணைப்புச் செய்து, அரசி யல் நீரோட்டத்திற்குள் ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக மீண்டும் உருவாக்கி, தமிழ் மக்களுக்கானத் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் தொடர்ந்தும் ஒரு அடிமை இனமாக தமி ழினம் வாழக்கூடிய சூழல் இந்த நாட்டில் உருவாக்கப்படும். ஆகவே சட்டத்தரணிகளே! சட்ட ஆலோசனையாளர்களே!  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கான நீதி, நியாயம் கிடைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என்பதையே நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

SHARE