இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழினத்தின் போராட்டத்தை சிதைக்கின்ற நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளது. கருணா ஒரு கொமடி பீஸ் என்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளமை சரிபிழைக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஒன்று. கருணா துரோகி என்றால் வியாழேந்திரனும் துரோகியே தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அனைத்து தமிழ் தரப்பும் துரோகிகளாகவே கணிக்கப்படுவார்கள். போராட்ட சூழ்நிலை என்பது தற்பொழுது ஒரு மாறும் நிலையை அடைந்துள்ளது. இதனையொரு நிலைமாறுகால அரசியல் என்று கூறுவார்கள். ஈழப்போரில் இடம்பெற்ற போராட்டங்களில் கருணா அம்மான் பங்குபெறாத சமர் களங்களே இல்லையெனலாம். அந்தளவிற்கு அவரின் போராட்டத்தின் நகர்வுகள் அமையப்பெற்றிருந்தது. ஜேசிக்குறு கதாநாயகன் என்ற விருது தேசியத்தலைவர் பிரபாகரனால் அவருக்கு வழங்கப்பட்டது. 35 க்கும் மேற்பட்ட களமுளைகளில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த கருணா அம்மான் அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் அவருடைய கமாண்டிங் வழிநடத்தல் என்பது பாரிய வெற்றிகளை குறித்த ஒரு விடயமாகும். இல்லையென்றால் அரசாங்கம் தமிழினத்தை காடில் போட்டு மேய்த்திருப்பார்கள். தேசியத் தலைவர் பிரபாகரனுடைய வழிகாட்டலின் கீழ் பல்வேறு தளபதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தாலும் கருணா, பால்ராஜ், தீபன், சொர்ணம், அமுதாப், ஜெயம், கடாபி, பானு போன்றவர்கள் கட்டளைத் தளபதிகளாக செயற்பட்டாலும் கருணா அம்மானே சிறந்த தாக்குதல்கள் தேசிய தலைவரின் நன்மதிப்பை பெற்றது ஒன்றாகும். அவர் தமிழினத்தை காட்டிக்கொடுத்த துரோகியானாலும் 25 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்படவும் பல்வேறு இராணுவ காப்பகங்களை அல்லது முகாம்களை அடித்து விழுத்துவதிலும் இவருடைய பங்கு அக்காலகட்டத்தில் அளப்பெரியது என்றே கூறலாம். வியாழேந்திரன் தனது அரசியல் பிரச்சனை காரணமாக கருணா அம்மான் அவரை திட்டித்தீர்க்கலாம். அது பெரிய விடயமல்ல. ஆனால் அவரின் போராட்ட வடிவங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் அளவிற்கு பதிவாகியிருக்கின்றது. இதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் சதிப்புரட்சியினால் தமிழீழ விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தி இன்று போராட்டம் பின்னடைவை சந்திக்கின்ற ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறதே தவிர கருணா மீது முழுப்பலியையும் சுமத்துவது தவறு. அவருக்கு வக்காளத்து வாங்குவதற்காக இவ் விடயம் எழுதப்படவில்லை. கருணா அம்மான் அவர்களை விடுதலைப்புலிகளிடமிருந்து பிரித்து விட்டால் முக்கிய போர்த் தளபதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது அரசாங்கத்தினுடைய திட்டம். அதனையே சர்வதேச நாடுகளும் கடைப்பிடித்தது. பின்னர் அவரை பேச்சுவார்த்தைக்கென அழைத்து உலக சிற்றின்பங்களை அனுபவிக்க கொடுத்து அவரிடத்தில் இருக்கின்ற போராட்டத்தின் வலுக்களை குறைத்ததே தவிர தனது சொந்த மூலையில் போராட்டத்தை காட்டிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ஒருவேளை தற்போதைய பூகோள அரசியலின் மாற்றத்தின் படி கருணா அம்மான் அவரை இந்தியாவோ அமெரிக்காவோ மீண்டும் ஒரு போராட்ட வடிவத்தை கொண்டு செல்ல அவரை பயன்படுத்தலாம். தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவருக்கும் கருணா துரோகியாக இருந்தாலும் அவருடைய போராட்ட களங்கள் இன்று சர்வதேச ரீதியளவில் இட்டுச்செல்வதற்கு ஒரு ஊன்று சக்திகளாக இருந்ததில் மாற்றுக்கருத்தில்லை. ஆகவே கருணா கொமடி பீஸ் என்று கூறுவதில் அர்த்தமில்லை.