ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தீர்மானம்!

353

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றினை முன்வைக்கும் வகையிலான முனைப்புக்கள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

53f46e7b7dede maithiri

இரகசியமான முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கையொப்பங்களை திரட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த யோசனையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் அதன் பின்னர், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தினை கலைக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

75 பேருக்கு மேல் கையொப்பமிடப்பட்டு யோசனை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை சபாநாயகரினால் நிராகரிக்க முடியாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறு கையொப்பங்களை திரட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

SHARE