கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க ஆகியோரை மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
JUST IN : MP Basil Rajapaksa brought out of the Police Financial Crimes Investigation Division Read more :English -#lka #SriLanka Sinhala – http://goo.gl/4XjuYu
Posted by Newsfirst.lk on Wednesday, April 22, 2015
திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பஸில் ராஜபக்ஷ, கடுவெல நீதிவான் முன்பாக முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.