நகங்கள்தான் கைகளுக்கு அதிக அழகைத் தரும். அதனால் அழுக்கு சேராத அளவுக்கு சுத்தமாக்கி, நகங்களை நன்றாக பராமரியுங்கள். நகங்கள் குறைபாட்டுடனோ, அழகின்றி யோ காணப்பட்டால் அதை நினைத்து வருந்தவேண்டியதில்லை. அழகு சிகிச்சை நிபுணர்கள் குறை தெரியாத அளவுக்கு அதனை மேம்படுத்தி அழகாக்கிவிடுவார்கள்.
நகத்தின் வெளியே பூசக்கூடிய பலவிதமான ‘கோட்டிங்’குகள் உள்ளன. பேஸ் கோட், டாப் கோட், எனாமல் ஆகிய மூன்று விதங்கள் அதில் உள்ளன. நகத்தின் முனைப்பகுதியை மினு மினுக்கச் செய்வது பேஸ் கோட். அதிக தொந்தரவு தராத ஜெலட்டின் வகையை சார்ந்தது அது. செல்லுலோஸ் நைட்ரேட் என்ற அழகு ரசாயனப் பொருளில் பிக்மென்ட்டுகள் சேர்த்து நெயில் எனாமல் தயாராகிறது. பேஸ் கோட், நெயில் எனாமல் பயன்படுத்தும்போது பளிச்சென்ற அழகை மெருகூட்டித் தருவதற்காக டாப் கோட் பயன்படுத்தப் படுகிறது. இது நிறமற்றது. சூரிய ஒளிபட்டு நகத்தின் நிறம் மாறாமல் இருக்க சன்ஸ்கிரீனும் பயன்படுத்த லாம்.
பாலீஷை நீக்கம்செய்யும்போது கவனியுங்கள். அதிகமாக ரிமூவரை பயன்படுத்தும்போது நகத்தின் இயற்கைத்தன்மை மாறி, நகம் பலகீனமாகிவிடும். அதனால் ரிமூவரை தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். பெரும்பாலான நேரம் கைகளை நீரில் நனைத்து வேலைபார்ப்பவர்களுக்கு நகங்களின் ஓரம் சிவந்து, வீங்கி வலி தோன்றலாம். கவனிக்காமலே விட்டு விட்டால் சீழ்பிடித்துவிடும். அதனால் தண்ணீரில் கைகளை நனைத்து வேலைபார்ப் பவர்கள் கைவிரல்கள் மீது அதிக கவனத்தைக் காட்டவேண்டும்.
நகங்களின் ஆரோக்கியத்திற்கு ‘பயோட்டின்’ என்ற சத்து அவசியம். இது பப்பாளி, கேரட், வாழைப்பழம் போன்றவைகளில் இருக்கிறது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கைகளில் கருப்பு புள்ளிகள், நிறமாற் றம், சுருக்கம் போன்றவை தோன்றும். அவர்கள் இளம் சுடுநீரில் உப்பு போட்டு அதில் கைகளை சிறிது நேரம் முக்கிவைக்கவேண் டும். பின்பு கைகளை நன்றாக துடைத்துக் கொண்டு பப்பாளி சாறு அல்லது தக்காளி சாறு பூசி மசாஜ் செய்யவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். சருமத்தின் வறட்சியை போக்க, பழச்சாற்றை சருமத்தில் பூசவேண்டும்.
பெண்கள் 45 வயதுக்கு பிறகு கை பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கைகளால் அதிக வேலை களை செய்வதால், கை எலும்புகள் பலம்பெறும் விதத்தில் கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணவேண் டும். கைகளுக்கு தொடர்ச்சியாக அதிக நேரம் வேலைகொடுக்கக்கூடாது. எழுதும் போதும், கீபோர்டில் வேலை செய்யும்போதும் இடைஇடையே கை களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.