கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள்

349
பெண்கள் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் எதுவென்று தெரியுமா?

பெண்கள் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் எதுவென்று தெரியுமா?
தற்போது நிறைய தம்பதியர்களால் கருத்தரிக்கவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம், அதிகப்படியான வேலைப்பளு என்று பல உள்ளன. அதுமட்டுமின்றி, கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கு பெண்கள் தான் காரணமாக சொல்லப்பட்டு வந்தனர். ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் முக்கிய காரணமாக உள்ளனர். ஆகவே யாராக இருந்தாலும், திருமண வயது நெருங்க ஆரம்பித்தால், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவது மிகவும் நல்லது.
இங்கு திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு, அதில் மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயம் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தினமும் சரியாக தூங்காமல் இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது குறைந்துவிடும். இப்படி உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எப்படியெனில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதனால் இனப்பெருக்க மண்டலமும் பாதிப்படைந்து கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும்.
பெண்கள் அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவான எடையுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே அவ்வப்போது உடல் எடையை பார்ப்பதுடன், அதனைப் பராமரிக்கவும் செய்ய வேண்டும்.
நிறைய ஆய்வுகளில் விந்தணுக்களின் பாதிப்பிற்கும், தொழில்நுட்பத்திற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எப்படியெனில் பெரும்பாலும் ஆண்கள் தங்களின் மொபைல் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், இனப்பெருக்க உறுப்புகளானது, போனில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிக்கப்படுகிறது. அதேப்போல் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதாலும் பாதிக்கப்படுகிறது.
பிரஷ் செய்த பின்னர் உங்களின் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? அதுமட்டுமின்றி, உங்களின் ஈறுகள் சிவப்பாகவும், வீங்கியும் உள்ளதா, அப்படியெனில் ஈறுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். இதனால் ஈறுகளை தாக்கியுள்ள கிருமிகளானது உடலினுள் சென்று, இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுகிறது. எனவே பெண்கள் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல் மருத்துவரை சந்தித்து போதிய ஆலோசனையைப் பெற்று பின்பற்றுங்கள்.
பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதே மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் இந்த பிரச்சனை வந்தால், ஓவுலேசனானது சரியாக நடைபெறாமல் போவதோடு, கருப்பையில் கருமுட்டை தங்காமல் போய்விடும். ஆனால் ஆய்வு ஒன்றில் பிசிஓஎஸ் இருந்தால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறது. அதற்கு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் தினமும் பின்பற்றி வர வேண்டும்.
SHARE