முகப்பொலிவு, பளப்பான சருமத்தை பெற நெல்லிக்காய் பொரியல்

404
அதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்

நெல்லிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 10
இட்லி மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் – தேவையான அளவு
தாளிக்க
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து… வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான நெல்லிக்காய் பொரியல் ரெடி.
SHARE