பறிக்கப்பட்ட அர்ஜூனவின் பதவி: இரகசியத்தை வெளியிட்ட பிரசன்ன

322
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே 2009 ஆம் ஆண்டு தன்னை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் இருந்து நீக்கியதால் தான் , நான் மகிந்த ராஜபக்சவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டதாக எனது சகோதரர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் நான்,முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காமினி லொக்குகேவே என்னை பதவியில் இருந்து நீக்கியதாக இதுவரை எண்ணிக் ண்டிருந்தேன். எனினும் தற்போது எனக்கு உண்மை தெரிந்து விட்டது.

காரணம் பிரசன்ன ரணதுங்க என்னை விட தகவல்களை நன்கு அறிந்தவர் ன்பதால், அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியும்.

மகிந்த ராஜபக்சவே என்னை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் இருந்து நீக்கினார். ரணம் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் நடந்த திருட்டை நான் நிறுத்தியதால், அவர் என்னை பதவியை விட்டு நீக்கினார் என்று தெரிவித்துள்ளார்.

SHARE