புருவங்கள் அடர்த்தியான வளர என்ன செய்ய வேண்டும்?

419

இந்த செய்தி தொகுப்பில் அடர்த்தியான புருவங்கள் வளர சில எளிய இயற்கை அழகு குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

  1. கற்றாழை எளிதில் கிடைப்பதாலோ என்னவோ அதிகம் உயரும் இதை பயன்படுத்துவதில்லை. இந்த கற்றாழையில் ஆலோனின் சத்து இருப்பதால் புருவம் வளர உதவும். மேலும் இதில் உள்ள கெரட்டின் சத்து முடி உடைவதை தவிர்க்கும்.
  2. கற்றாழை எடுத்து அதன் உள்ளே உள்ள ஜெல்லை தனியாக எடுத்து அதை மட்டும் கண் புருவத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண் புருவ முடி வளரும்.
  3. இரவில் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து, மறுநாள் அது நன்கு ஊறிய பிறகு அதை அரைத்து பேஸ்ட்டாக எடுத்து புருவத்தின் மேல் தடவ வேண்டும். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வெந்தயத்தில் உள்ள நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை புருவ முடியை கருமையாக வைக்கவும், புருவம் வளரவும் உதவும்.
  4. தினமும் விளக்கெண்ணெயை புருவத்தின் மீது தடவி வர அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும்.
SHARE