விதவிதமான ஸ்டைலில் பிரெஞ்சு மெனிக்யூர் செய்வது எப்படி எனத் தெரியுமா?

403

பிரெஞ்சு மெனிக்யூர் என்பது நகங்களின் நுனிப்பகுதியை வெண்மை நிறத்திலும் மற்ற பகுதிகளை கண்ணாடி மாதிரி ட்ராண்ஸ்பரண்டாகவும் அழகுபடுத்தி காட்டும் முறையாகும். ஆனால் இந்த இரண்டே இரண்டு கலரிங்கை கொண்டு அழகுபடுத்துவது நிறைய பெண்களுக்கு பிடிப்பதில்லை.

அவர்கள் தங்கள் நகங்கள் இன்னும் அழகாக ஆசைப்படுகின்றன. எனவே இந்த பிரஞ்சு மெனிக்யூருடன் சில கலைவண்ணத்தையும் சேர்த்து பண்ணினால் உங்கள் நகங்களின் அழகிற்கு ஈடு இணை இல்லாமல் போய்விடும்.

Fancy Styles That You Can Try With Your French Manicure

இந்த பிரெஞ்சு மெனிக்யூர் கலைவண்ணத்தை சலூனில் செய்வது போன்று வீட்டிலேயே சில தேவையான பொருட்களை கொண்டு செய்து அசத்தலாம். இதை மிகுந்த பொறுமையுடன் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் நகங்களும் நாட்டியமாடும் என்பது தான் உண்மை.

 வெண்மை கலரிங் பூசுதல்

வெண்மை கலரிங் பூசுதல்

இதைச் செய்வதற்கு வெண்மை கலரை எடுத்து கொண்டு உங்கள் நகங்கள் முழுவதையும் கவர் பண்ண வேண்டும். இது உங்கள் எல்லா விதமான ஆடைகளுக்கும் பொருந்தும். ஆனால் இதன் வெண்மை நிறத்தை அழுக்காகாமல் பாதுகாப்பது தான் கஷ்டம். கடைசியில் ட்ரான்ஸ்பரண்ட் கலரிங் அப்ளை செய்யவும்.

மோதிர விரலில் கவனம்

மோதிர விரலில் கவனம்

பிரஞ்சு மெனிக்யூர் செய்வதற்கு கொஞ்ச நேரம் செலவழிக்க வேண்டும். இப்பொழுது மோதிர விரலை எடுத்து அலங்கரிக்கலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த விரலை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

ஓரு விரல் நகங்களை மட்டும் அழகுபடுத்த கொஞ்சம் அதிகமான கவனம் இருக்க வேண்டும். நகங்களின் கலைவண்ணத்திற்கு அடர்ந்த நிறங்களை தேர்ந்தெடுத்தால் பார்பதற்கு அழகான லுக்கை கொடுக்கும்.

 க்ளிட்டர்ஸ் மற்றும் ஸ்பார்க்கிள்ஸ்

எளிதாக நகங்களை அழகுப்படுத்த க்ளிட்டர்ஸ் மற்றும் ஸ்பார்க்கிள்ஸ்யை பயன்படுத்தலாம். இதை எந்த பியூட்டி ஸ்டோர்லிலும் வாங்கிக் கொள்ளலாம்.

எல்லா நகங்களிலும் இதைச் சமமாக பரப்ப வேண்டும். சமமாக இல்லையென்றால் அது பார்ப்பதற்கு அழகில்லாமல் விகாரமாக தெரியும். இதன் நிறங்கள் உங்களுக்கு பொருத்தமான கலரை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

 பிரஞ்சு மெனிக்யூர் க்ளிட்டர்ஸ்

பிரஞ்சு மெனிக்யூர் க்ளிட்டர்ஸ்

இது மற்றவற்றிலிருந்து வித்தியாசமானவை. நகங்களின் நுனிப்பகுதியை க்ளிட்டர் நெயில் பாலிஷ் கொண்டு கவர் பண்ண வேண்டும். படத்தில் கோல்டன் கலர் நெயில் பாலிஷ் பயன்படுத்தி உள்ளனர். நீங்கள் வித்தியாசமான கலரை தேர்ந்தெடுக்கலாம். இதை பயன்படுத்தும் போது சமமாக அப்ளை பண்ணினால் நல்ல ஜொலிப்புடன் காணப்படும்

 டிசைன் பிரஞ்சு மெனிக்யூர்

டிசைன் பிரஞ்சு மெனிக்யூர்

இந்த படத்தை உன்னிப்பாக கவனித்தால் தெரியும் வெண்மை கலரிங்கில் ஸ்டார் டிசைன் போடப்பட்டுள்ளது. இதற்கான கிட் பொருட்கள் பியூட்டி ஸ்டோரில் தாராளமாக கிடைக்கின்றன.

இதற்கு அடர்ந்த வித்தியாசமான கலரை பயன்படுத்தியும் ஸ்டார் டிசைன் செய்யலாம். இது உங்கள் நகங்களுக்கு வெண்மை கலரிங்கில் ரொம்ப தனிப்படுத்தப்பட்ட டிசைன் லுக்கை கொடுக்கும்.

 ஸ்டோன் நெயில் டிசைன்

ஸ்டோன் நெயில் டிசைன்

பிரஞ்சு மெனிக்யூரை அழகுபடுத்த மற்றொரு வழி ஸ்டோன் வொர்க் செய்தல். இதை எந்த விதமான கலரிங் பெயிண்டிலும் செய்யலாம்.

இதற்கு ஸ்டோனை ஒரு அழகான வரிசையில் அப்ளை செய்தால் உங்கள் நகங்கள் வசீகரமாகவும் தனித்துவமாகவும் தெரியும். பிரெஞ்சு மெனிக்யூரில் வெண்மை கலரிங் பிங்க் ஸ்டோன் காம்பினேஷன் புகழ்பெற்றது.

நீங்கள் எந்த கலருக்கும் தகுந்தமாறி கூட ஸ்டோன் வொர்க் செய்து கொள்ளலாம். ஒண்ணே ஒண்ணு உங்கள் நெயில் பாலிஷின் எந்த பகுதியில் ஸ்டோன் வொர்க் செய்ய வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்து கொள்ளவும்.

SHARE