100 கிராம் பாலாடைக்கட்டி அன்றாட கால்சியம் அளவில் 25 சதவீதத்தையும், வைட்டமின் ஏ தேவையில் 22 சதவீதத்தையும் பூர்த்தி செய்துவிடும். பாலாடைக்கட்டியில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். காலை உணவுடன் பாலாடைக்கட்டியை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய நிலையில் இருக்கும். ஏனெனில் கொழுப்பு ஜீரணமாகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
அதனால் பசி உணர்வு தாமதமாகும். உடற்பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி உடல் எடையை குறைப்பதற்கு கலோரிகளை குறைப்பது அவசியமானது. அதற்கு பாலாடைக்கட்டி உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பாலாடைக்கட்டி சாப்பிடுவதோடு உடற்பயிற்சியும் செய்து வர வேண்டும். பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியைவிட எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அதிக கொழுப்பு கொண்டது. 100 கிராம் பாலாடைக்கட்டியில் 18 முதல் 19 கிராம் வரை உயர் ரக புரதம் இருக்கும். இது தசைகள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
100 கிராம் பாலாடைக்கட்டியில் 245 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் முக்கியமானது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேவை.