கோதுமை மாவு – 1 கப்
தக்காளி – 2
குடைமிளகாய் – 1
பெ.வெங்காயம் – 3
மிளகாய்த்தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை, எண்ணெய் – சிறிதளவு
தண்ணீர், உப்பு – தேவைக்கு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி வதக்கி வைக்கவும்.
பிறகு சப்பாத்திகளாக தேய்த்து நடுவில் குடைமிளகாய் மசாலாவை வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து வைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.