இந்தியாவில் புதிதாக தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 16ம் திகதிக்கு பின்னர் புதிய அரசாங்கம் பதவி ஏற்கவுள்ளது.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி, விரைவான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ் தேசிய கூட்டமைப்பு விருப்பத்துடனும், தயாராகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த தினம் ஒன்றில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்த போது இந்த விடயத்தை தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.