வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தி- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்
மனித நேயத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான நலனுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமேன அவர் தெரிவித்துள்ளார்.
கௌதம புத்த பிரான் சமாதானத்தையே வலியுறுத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தரின் வழிகாட்டல்கள் அரசாங்கங்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழிகாட்டலாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுயலாப நோக்கங்களின் அடிப்படையில் செயற்படுவோரை மக்கள் நிராகரிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.