உலக அரசியலை பொறுத்தவரையிலும் உள்ளுர் அரசியலைப் பொறுத்தவரையிலும் என்ன இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதில் பலரதும் அவதானம் உற்றுநோக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸினுடைய தாக்கம் ஒருபுறம் மறுபுறத்தில் ஒவ்வொரு நாடுகளும் குறித்த நாடுகளிடையே எவ்வாறான பிரச்சனைகளை உருவாக்குவது அதில் எப்படி குளிர்காய்வது என்ற ஒரு பூகோள அரசியல் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதிலே ஆரம்பத்தில் கொரோனா வைரஸை உருவாக்கிய சீனா நாடு முழுவதும் வைரஸை பரப்பி அதனூடாக வர்த்தக வியாபாரங்களை அவர்கள் பலப்படுத்திக்கொண்டு வருகின்றார்கள். கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு அவர்கள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துவருகின்றார்கள்.
ஆகவே இந்த பூகோள அரசியலுக்குள் இலங்கையும் மாட்டிக்கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது நிரந்தரமாகவே சீனாவினுடைய காலணிக்குள் இலங்கைத்தீவு பறிபோய்விட்டது என குறிப்பிடலாம். இலங்கைத்தீவு பறிபோயுள்ள நிலையிலே இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட இருப்பதாக இரகசிய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது இந்தியாவும் இலங்கையும் பாரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் கச்சைதீவு கூட இனி சீனாவிடம் பறிபோக வாய்ப்புள்ளது. இரணைதீவில் ஒரு பகுதியை இலங்கை அரசு சீனாவிற்கு கொடுக்க தயாராக இருக்கின்றது. அவ்வாறிருக்கும் பொழுது இந்த ஆசிய பசுபிக் பிராந்தியத்திலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பது நீண்டதூர இலக்கை கொண்டதாக அமைந்திருக்கிறது. ஒருவகையில் சொல்லப்போனால் தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டத்தை மழுங்கடிக்கின்ற வகையிலே இந்த சர்வதேச நாடுகள் ஈடுபட்டதை எண்ணி தற்பொழுது அவர்கள் கவலைப்படுகின்றனர். சீனாவைத் தவிர ஏனைய நாடுகள் ஏன் தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டத்தை நாம் அழித்தொழிப்பதற்கு இடமளித்தோம் என்று கவலைப்படுகின்றனர். சீனாவை பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இந்த நாட்டிலிருந்தால் தாங்கள் நிரந்தரமாக கால் பதிக்க முடியாது என்ற நிலை அவர்களுக்கு இருந்தது. இன்றைய அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் இந்தியாவிற்கு இலங்கையினுடைய கடற்பிராந்தியம் உட்பட நிலம் தொடர்பிலான பகுதிகளும் அவர்களுக்கு அத்தியாவசியப்படுகிறது. தற்பொழுது இந்தியாவினுடைய பல இறக்குமதிகள் வியாபாரம் சம்பந்தமான இறக்குமதிகளை இலங்கை அரசு தடை செய்திருக்கின்றது. அமெரிக்கா தான் நினைத்தபடி இலங்கையை கையாள முடியவில்லை என்ற ஒரு ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு தமிழினப்படுகொலை இந்த நாட்டிலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது அதனூடாக இந்த நாட்டிலிருக்கின்ற ஜனாதிபதியினுடைய அதிகாரத்தை மட்டுப்படுத்தலாம் என்ற அல்லது அவர்களை வேறு திசைக்கு திருப்பலாம் என்ற இந்தியா மற்றும் அமெரிக்காவினுடைய நட்பாசை தற்பொழுது தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இந்த கொழும்பிலே வழங்கப்பட்ட போர்ட்சிட்சி சம்பந்தமாக முக்கியமாக இலங்கையிலே கேந்திர முக்கயத்துவம் வாய்ந்த ஒரு பொருளாதார மத்திய நிலையமாக இந்த போர்ட்சிட்டி அமையப்பெற்றிருக்கின்றதில் மாற்றுக்கருத்தில்லை. தற்பொழுது அனைத்து கலை கலாச்சாரத்தை பொறுத்தவரையிலே சீனாவிலுள்ள கலை கலாச்சாரங்கள் திணிக்கப்படுகின்றன. அவர்கள் இங்கு வந்து தமிழையும், சிங்களத்தையும் கற்றுக்கொண்டு அவர்களுக்கு அவர்களே அங்கு தனி வானொளிகளை திறந்திருக்கிறார்கள். தனி தொலைக்காட்சிகளை திறந்திருக்கிறார்கள். இன்னும் பல தொலைக்காட்சி சானல்களை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அவர்களுடைய பொருளாதாரம் இருக்கின்றது என்றால் அதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆகவே ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். சீனாவினுடைய பொருளாதார நகர்வு என்பது ஒரு நாட்டுக்குள் கடன் சுமையை சுமத்தி அந்த கடனினூடாக அவர்கள் குளிர்காய்ந்து அந்த கடனை கட்டாது போனால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஆசிய பசுபிக் பிராந்தியத்திலே எந்தவொரு நாடும் தம்மை தாக்காத வகையில் அவற்றை தமது கைப்பைக்குள் போட்டுக்கொள்வது தான் இவர்களின் நீண்டகால திட்டமாக இருக்கின்றது. அந்த வகையில் இலங்கையில் இருக்கின்றவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற வகையில் பார்த்தாலும் கூட சீனாவை பொறுத்தவரையில் அது நிறைவு கண்டிருக்கின்றது. அதே நேரம் அமெரிக்காவும் இந்தியாவும் போரியல் ரீதியாக பாரிய தோல்வியை கண்டிருக்கின்றது. அவர்கள் பாரிய நிலைப்பாட்டில் இருந்து அவர்களுடைய நிலைமை மிக மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது. சீனாவை எதிர்க்கக்கூடிய ஒரு சூழல் இவர்களுக்கு இல்லையென்ற ஒரு நிலைப்பாடு இருக்கின்றது. காரணம் என்னவென்றால் கொரோனா வைரஸை பரப்பிய சீன அரசாங்கத்தின் மீது உலக நாடுகளோ சுகாதார ஸ்தலங்களோ எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆகவே இவர்கள் மிக ஆபத்தானவர்கள். இந்த நாட்டில் ஆபத்தான வைரசுகள் இருக்கிறது என்பதை கண்டறிந்தே இவர்களுக்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அல்லது இவர்களுடைய பொருளாதாரத்தை மட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடுகளும் இவர்களின் வியாபார வணிக வர்த்தகங்களை முடக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளை இதுவரையும் மேற்கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் அந்த வைரஸை கூடுதலாக சீனா ஒவ்வொரு நாடுகளிலும் கால் பதித்திருக்கிறது. அவர்களுடாக இந்த வைரஸை பரப்பி தங்களின் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாட்டை அழிக்கக்கூடிய வல்ல வைரஸைகூட பரப்பிவிட முடியும் என்ற பயம் இவர்களுக்கு இருக்கின்றது. இலங்கை அரசும் கூட ஒரு கொத்தடிமையாக அதாவது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களும் தற்பொழுது சீனாவின் கொத்தடிமைகளாகவே அவர்கள் ஒரு நடைப்புண அரசியலையே செய்துவருகின்றார்கள். இந்த அரசியல் மாற்றம் உண்மையில் இந்த நாடு சீனாவிற்கு விற்கப்படுகின்றது என்பதை சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். விற்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இதில் ஆச்சரியப்படவேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு நாட்டை சர்வதிகார ரீதியாக தனது பொருளாதாரத்தை திணித்து இந்த நாட்டின் சுய தொழினுட்ப பொருளாதாரத்தை அவர்கள் மேம்படுத்த அவர்களுக்கு விருப்பமில்லை. ஆகவே நாங்கள் அதற்கான காப்பரண்களை இலங்கை அரசு நிரூப வேண்டிய தேவை இருக்கிறது. அந்த காப்பரண்களை நிரூபாவிட்டால் நிச்சயமாக அடுத்தகட்ட ஆபத்தில் நாங்கள் மூழ்க வேண்டிய சூழல் உருவாகும்.
ஆகவே பூகோள ரீதியாக அரசாங்கங்கள் ஒன்றையொன்று மோதுகின்றமை வழமையானதொன்று. ஆனால் அதில் எங்களுடைய நாட்டை பாதுகாக்கும் சூழலை நாங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தியா தனது சுயநலத்தை பார்க்கின்றது. அமெரிக்கா தனது சுயநலத்தை பார்க்கின்றது சீனா இந்த நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. ஆகவே சீனர்களை விரட்டியடிக்கின்ற ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் தனித் தமிழீழத்தை இந்த அமெரிக்காவும் மற்றும் இந்தியாவும் இணைந்து இந்த நாட்டில் ஒரு தனி தமிழீழத்தை உருவாக்கும் என்பதிலே மாற்றுக்கருத்தில்லை. காரணம் என்னவென்றால் அந்த நிலைப்பாடு நிச்சயம் அவர்களுக்கு தேவை. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் எந்தவொரு நாட்டினுடைய கப்பல்களோ அல்லது எந்தவொரு நாட்டினுடைய வணிகங்களோ இந்த நாட்டில் தவிடுபொடியாக்கப்பட்டவை. சர்வதேச கடற்பரப்பில் கூட நிலையான தமது தனித்துவத்தை அவர்கள் வைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சீனாவினுடைய நிலைப்பாடு என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் இருப்பார்களாக இருந்தால் அவர்கள் இலங்கைத்தீவிலே தாங்கள் நினைத்தவாறு எதையுமே சாதித்துவிட முடியாது என்ற நிலைப்பாடு இருந்தது. ஆகவே இந்த நாட்டுக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தபொழுது இந்தியாவினுடைய ரோ சாரி விற்பனைக்காக 1500 க்கும் மேல் இங்கு களமிறக்கப்பட்டார்கள் தங்களுடைய புலனாய்வுக்காக. தமிழீழ விடுதலைப்புலிகள் இதனை கண்டறிந்து சாறி விற்பனை செய்யும் அனைவரையும் கண்டறிந்து இலங்கையில் இருந்து விரட்டியடித்தார்கள். ஒரு பிச்சைக்காரனைக்கூட வீதியில் நடமாட விடவில்லை. அந்த பிச்சைக்காரனுக்கான ஒரு இடத்தை தயார்படுத்தி அங்கே அவர்களுக்கு தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்து அங்கு வேலைவாய்ப்புக்களை கொடுத்து அந்த தோட்டத்தை பராமரித்து அங்கு வாழ்வதற்கான நடவடிக்கைகளை செய்தார்கள். பிச்சைக்காரர்களும் கூட பலர் இங்கு உள்நுழைந்திருந்தார்கள்.
ஆகவே இந்த வியாபார நோக்கில் வந்த இந்தியர்கள்கூட இறுதியில் எடுத்த தரவுகளை எடுத்து இந்தியாவிற்கு கொடுத்தார்கள். இந்தியா அதனை வைத்து தான் எந்தெந்த இடங்களில் எவ்வாறான தளங்கள் செயற்படுகின்றது என்பதனை அறிந்து இராணுவ நடவடிக்கையானது இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்டது. ஒவ்வொரு அரசாங்கங்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த நாட்டுக்குள் நுழைவதற்கு மிகவும் ஒரு இக்கட்டான சூழலை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்த நாட்டில் கிளர்ச்சி ஏற்பட வேண்டும். சீன காலணித்துவத்திற்கு எதிராக கிளர்ச்சி இந்த நாட்டிலே நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும். இலங்கையிலே கிளர்ச்சி உருவாக்கப்படுவது இலங்கை அரசுக்கு பாரியதொரு விடயமல்ல. அதற்கு ஏற்ற போராளிகள் கூட தற்பொழுது இராணுவத்தினரின் கஷ்டடியில் தான் இருக்கின்றார்கள். போராட்ட தளபதிகளும் இருக்கிறார்கள். இவர்களுடனும் கலந்தாலோசித்து மறுமுனையில் சீனாவை எவ்வாறு எதிர்க்க வேண்டும் என்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாகவே இந்த சீன காலணித்துவத்தை இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியும்.