ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.

544
ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.

சீன படைக்குழுவினரை, இலங்கையின் முப்படைத் தளபதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

ஜெனரல் க்யூ குயிலங் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினர் என்பதுடன் அதன் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமாவார்.

1950 ஆண்டு மார்ச் மாதம் சாங்டோங் மாநிலத்தில் பிறந்த அவர் ஹன் என்ற இனத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் இராணுவத்தில் 1966 ஆம் ஆண்டு இணைந்து கொண்ட அவர், 1967 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து கொண்டார்.

இவர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு கம்போடியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகியவற்றின் அழைப்பின் பேரில் மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் இறுதிக்கட்டமாக இலங்கை வந்துள்ளது.

இந்த குழுவினர் திருகோணமலையில் உள்ள விமானப்படை கலாசாலை மற்றும் கடற்படை கலாசாலைக்கும் விஜயம் செய்ய உள்ளனர்.

அத்துடன் கண்டி தலதா மாளிகை, கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க விமானப்படைத் தளம் ஆகியவற்றும் விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.

சீன படையதிகாரிகள் குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படை மற்றும் பொலிஸ் தலைமை அதிகாரிகளையும் சந்திக்க உள்ளனர்.

திருகோணமலை சீனன்குடாவில் உள்ள கடற்படை மற்றும் விமானப்படை கலாசாலைகளுக்கு இன்று விஜயம் செய்யும் இலங்கை விமானப்படைத் தளபதி கலாசாலையில் இரவு விருந்துபசாரம் அளிக்க உள்ளார்.

 

SHARE