இளநரை வருவதை தடுக்கும் வழிமுறைகள்

355
இளநரை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

இளநரை வராமல் இருக்க என்ன செய்யலாம்?
கருகருவென நீண்டு வளர்ந்த கூந்தலுக்காக பெண்கள் ஏங்குவதுண்டு. ஆண்களும் கூட வயதான காலத்தில் தலைமுடியை கருமையாக்க மெனக்கெடுவார்கள். பொதுவாக முகத்துக்கு அழகு தருவதில் துலைமுடியின் பங்கு மிக முககியமானது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க தொடங்கி விட்டால் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே முடியை கருப்பாக்குவதற்காக என்னென்ன மருத்துவம் இருக்கிறதோ அத்தனையையும் தேட ஆரம்பித்து விடுகிறோம். உண்மையில் ஆசிய மக்களுக்கு 25 வயதிலிருந்து முடி நரைக்க தொடங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மெலனோசைட்ஸ் என்னும் நிறமியே தலை முடி மற்றும் தோலுக்கு நிறத்தை கொடுக்கிறது. தோலில் உள்ள மெலனோசைட்ஸ் குறையத் தொடங்கினால் தலைமுடிய நரைக்கத் தொடங்கும். பரம்பரை இளநரை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றுக்காக நீண்டகாலம் மருந்துகள் சாப்பிடுவது மனஅழுத்தம் ஊதாக்கதிர்களின் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இளநரை ஏற்படலாம்.

உண்மையில் இளநரை வந்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்பதே உண்மை. நோய் பாதிப்பின் காரணமாகவோ அல்லது சத்துக்குறைபாடுகளாலோ இளநரை ஏற்பட்டால் அதை சரி செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால்  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளநரை வந்தால் மீண்டும் அவர்களது தலைமுடியை கருப்பு நிறமாக மாற்ற வாய்ப்பு இல்லை.

இளநரை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

வைட்டமின் பி 12 சத்துக்குறைபாடு, இளநரை ஏற்பட மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது, வைட்டமின் பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் இளநரை வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகையால் உணவில் இந்த சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்

* தைராய்டு ஹார்மோன்களின் பிரச்சனை ஏற்பட்டால் அது இளமையிலேயே தலைமுடி நரைக்க ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்குத்தான் தைராய்டு ஹார்மோன் பிரச்சனை அதிகம் ஏற்படும். எனவே அறிகுறிகளை கவனமாக கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான மருத்துவம் மேற்கொண்டால் இளநரை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

* முடி பராமரிப்பு பொருள்களாக லோஷன், கண்டிஷனர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் இளநரை ஏற்படலாம். கலரிங், பிளீச்சிங் மற்றும் ரசாயனப்பொருள்கள் நிறைந்த  ஷாம்புக்களை அடிக்கடி தலையில் தேய்த்து குளிப்பதாலும் இளநரை உண்டாகலாம். எனவே முடிந்த வரை தலைமுடியில் பாதிப்பு ஏற்படாதவாறு இயற்கை முறையில் பராமரித்து வர வேண்டும்

* மன அழுத்தத்துக்கு நோ சொல்லுங்க. மன அழுத்தத்துக்கும் இளநரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

கூந்தலை கருமையாக்கும் வழிகள்

இயற்கை முறையில் விளைந்த மருதாணி, அவுரி இலையை காயவைத்த பொடியாக்கி கலரிங் செய்ய பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை, மருதாணி, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வரலாம்.

கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவது, கறிவேப்பிலையில் டீ தயாரித்து குடிப்பது போன்றவையும் இளநரை குறைபாட்டை சரிசெய்ய உதவும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது நல்லது.

SHARE