சிங்களத் தலைமைகள் இனப்படுகொலைகளையே பல்வேறு வடிவங் களில் முன்னெடுத்தன.

667

 

 

இலங்கைத்தீவின் வரலாறு அரசிய லமைப்புச் சட்டத்தின் ஊடாக பௌத்த மதத்
துக்கு முதலிடம், புத்தசாசன அமைச்சினூடாகப் பஞ்சசீலக் கொள்கைகளுக்குப் பிரத்தியேக இடமும் கொடுக்கப்படுவதாகக் கூறப்
படுகின்ற போதிலும் அது நடைமுறையில் பெருமளவுக்கு படுகொலைகளால் அறியப்
படும் வரலாறாகவே இருந்துவருகிறது. இந்ததவிர்க்கமுடியாததும் சகிக்க முடியாததுமான துர்ப்பாக்கியமான நிலைக்கான அத்திவாரம்,
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பான காலத்திலேயே இடப்பட்டு இருக்கின்றது.
அப்போதிலிருந்தே இந்த நாட்டை ஆளத் தலைப்பட்ட சிங்களத் தலைவர்கள்,
சிங்கள பௌத்த தேசியம்கொண்ட ஒரு நாடாகவே இலங்கையை வைத்திருக்க
முயன்றிருக்கின்றார்கள். அதனை நடை முறையில் பேணுவதற்கு சிறுபான்மை இனங் களை அச்சுறுத்தி வைத்திருத்தல் என்ற உத்தியைக் கையிலெடுத்திருக்கின்றார்கள். இது 1883இல் ஆரம்பித்தது. வர்த்தகத்தில்
ஈடுபட்ட மலையாளிகளுக்கு எதிராக இந்த நிலைப்பாட்டை அநாகரிக தர்மபாலா, ஏ.ஈ.
குணசிங்கா போன்ற சிங்கள பௌத்த பேரின வாதத்தின் பிதாமகன்கள் முன்னெடுத்துச் சென்றார்கள்.

அதனை பின்வந்த சிங்களத்தலைவர்களும் தொடர்ந்தார்கள்.
அதற்காக அவர்கள் பிரயோகித்த மிகப் பயங்கரமான ஆயுதமாக இனப் படு
கொலைகளே அமைந்தன. அதனை இலங்கை வாழ் தமிழ்பேசும் இனத்தை அச்சுறுத்திப்பணியவைக்கும் தந்திரமாகவே கையாண்டனர். ஆனால் அந்தப் படுகொலைகளை நிகழ்த்திய அரச பயங்கரவாதத்தை, தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் மூலம் எதிர்கொள்ளத் தொடங்கியபோது, சிங்களத் தலைமைகளின் திட்டங்கள் ஆட்டம் கண்டன. இலங்கை என்ற நாட்டுக்குள் தமிழ்
மக்கள் இணைந்து வாழமுடியாது என்ற முடிவை எடுக்கவேண்டி ஏற்பட்டபோது அதற்கு அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டமையும் (வேர்கள் இணையம் தட்டச்சு செய்து காலத்தின் தேவை கருதி  மீள் வெளியீடு செய்கின்றது)
ஒரு காரணமாக முன்னின்றது. அதனை எதிர்கொள்ளவோ ஜீரணிக்கவோ திராணியற்ற சிங்களத் தலைமைகள் இன்னும் இன்னும்
இனப்படுகொலைகளையே பல்வேறு வடிவங் களில் முன்னெடுத்தன.
வயலில், கடலில், தொழிலில் ஈடுபடும் போது தரைவழி, கடல்வழி போக்குவரத்தில்
ஈடுபடும்போது, சொந்தக் குடியிருப்புக்களில், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த போது என பல்வேறு வகையிலும் இனப்
படுகொலைகள் இடம்பெற்றன.

 

இனப் படுகொலைகளின் தொடக்க கால அரசுத் தலைவராக இருந்த டி.எஸ்.
சேனநாயக்கா அவரைத் தொடர்ந்து வந்தடட்லி சேனநாயக்கா, சேர்.ஜோன் கொத்த
லாவல, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா,
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா, டி.பி.விஜயதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்க ஆகிய அனைத்துத் தலைவர் களினது காலங்களிலும் தமிழினப் படுகொலைகள் இடையறாது நிகழ்ந்திருக்கின்றன. இலங்கை அரசின் நிகழ்ச்சிநிரலில் பிரதானமானதாக இருந்துவந்த படுகொலையினை ஒவ்வொரு தலைவர்களும் தத்தமதுகால, சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிகழ்த்தியுள்ளனர். ஆயினும், அவை ஒருவரை விஞ்சியதாக மற்றவர் காலத்தில் நடந்திருப்பது தமிழ்
மக்கள் எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலாகும்.

சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்ட இப் படுகொலைகள் ஒரு அரச
பயங்கரவாதமாக பரிணாமமடைந்தபோது இதனை எதிர்கொள்ள, தமிழ்மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்பட்டன.
அதற்கான சட்ட உருவாக்கங்களும் சிங்களப் பிரதிநிதித்துவத்தை பெரும்பான்மை
யாகக் கொண்ட பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டன.

 

1979ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை அரச பயங்கர
வாதத்தினூடாக ஒடுக்குவதற்கும் தமிழினப்படுகொலையைப் பல்வேறு தளங்களில்
விரிவாக்குவதற்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனக்
கிருந்த பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றினார். அது தொடர்ந்தும்இற்றைவரை நடைமுறையில் உள்ளது.பேரினவாதக் கட்சிகள் மாறிமாறி ஆட்சியைக் கைப்பற்றினாலும் இந்தச் சட்டத்தின்கீழ்
எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்தச் சட்டம் தென்னாபிரிக்காவில்
போத்தா  அரசின் மிக மோசமான நிற ஒதுக்கல் சட்டத்தைவிடப் பயங்கரமானது என சர்வதேச யூரர் சபை, சர்வதேச மன்னிப்புச்சபை போன்றன எடுத்துக்காட்டி
நீக்கும்படி கோரியபோதும் சிங்களத் தலைமைகள் இம்மியும் அசையவில்லை. இதன்
மூலம் அரச பயங்கரவாதம் மேற்கொண்டசகல இனப்படுகொலைகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகவே உலகின்முன் கொண்டுசெல்லப்பட்டன.

 

கிழக்கு மாகாணத்திலும் வடக்கிலும் நடந்த மிகப்பெரும் படுகொலைகளும்
இவ்வாறே நியாயப்படுத்தப்பட்டன் அல்லதுமூடிமறைக்கப்பட்டன. ஆலயங்களிலும் அகதி முகாம்களிலும் கூடியிருந்த தமிழர்கள் மீதும் சிகிச்கைக்காக நோயாளர்கள் அனுமதிக்கப் பட்டிருந்த மருத்துவமனைகள் மீதும் மாண
வர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது பாடசாலைகள் மீதும் நடாத்தப்பட்ட தாக்கு
தல்களில் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும் அந்தச் சட்டத்தின்மூலம் அங்கீகரிக்கப்
பட்டன: இது பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், வயோதிபர்கள், நோயாளிகள்
என்று வேறுபாடில்லாமல் தமிழர்கள் என்பதற்காக அனைத்துத் தரப்பினர் மீதும் பிரயோகிக்கப்பட்டது.

சிங்களத் தலைமைகள் தமதுஅரசியல் ஆதாயத்துக்காக அரசியல் நிகழ்ச்சி
நிரலில் சேர்த்துக்கொண்ட தமிழினப் படுகொலைகள் மிகக் குரூரமானவையாக –
மனிதாபிமானம் அற்றவையாக இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டியே
வந்துள்ளன. இதற்கு 1983, ஜீலை 11இல் ஜே.ஆர் லண்டன் டெலிக்கிராப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி நல்லதொரு சான்றாகும்.
“நான் யாழ்ப்பாணத்து மக்களுடைய அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்
பட மாட்டேன். அவர்களது உயிர், உடல் களைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்:
எனது அரசாங்கம் எதைச் செய்யவேண்டு மென முடிவெடுத்துவிட்டதோ அதைச்
செய்தே தீரும்” என்று கூறியிருந்தார்.
சிங்களப் பேரினவாதத்தின் சிந்தனை இலங்கைத்தீவு முழுவதும் பௌத்த
சிங்கள நாட்டிற்குரியது என்பதாகக் கட்டி வளர்க்கப்பட்டுவர, காலத்துக்குக் காலம்
தமிழ்மக்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. குற்றவியல் சட்டங்களினால் குற்றவாளிகளாக
இனங்காணப்பட்டவர்கள், ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்டனர்.

 

இச் சிங்களக் குடியேற்றமானது 1940இல் ஆரம்பிக்கப்பட்டபோது, அப்போதைய
காணி, விவசாய அமைச்சரான டி.எஸ்.சேன நாயக்கா அரசமரக் கன்றொன்றை நாட்டிய பின் ஆற்றிய உரை கவனத்திற் கொள்ளத் தக்கது.  “இன்று நாட்டப்படும் இந்த
அரசமரம் வளர்ந்து பெரு விருட்சமாகும்போது இந்த மண்ணில் உங்களைத் (குடியேற்றப் பட்ட சிங்களவரை) தவிர வேறெவரும் குடியிருக்கக்கூடாது.”

1987, பெப்ரவரி 30இல் கொக்கட்டிச்சோலையில் இடம்
பெற்ற படுகொலையும் அதற்கென அளிக்கப்பட்ட ஒரு பயிற்சியின்
அடிப்படையில் செய்யப்பட்டதே. பிரிட்டனின் கீனிமீனி (K.M.S) பயிற்சி
படைகளுக்கு அளிக்கப்பட்டதாக வும் அதனை பரீட்சித்துப் பார்ப்
பதற்காக – பெற்ற பயிற்சியினை படையினர் சரியாகச் செய்கின்றார்
களா என்று அறிவதற்காக இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட
தாகவும் பயிற்சியளித்தவர்களே தெரிவித்திருக்கின்றார்கள்.

வரப்பட்ட தினமான 1956, ஜுன் 5ஆம் திகதி நடைபெற்றது. அம்பாறை கல்லோயாவில்
குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் அக் கிராமத் தில் பூர்வீகவாசிகளான தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பின்போது 150 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாய மடைந்தனர். அன்றைய தினமே ஒடுக்கு முறையின் இன்னொரு வடிவமான பாலியல் வன்முறைச் சம்பவமும் ஆரம்பமானது.
தமிழர்களுக்குத் தென்னிலங்கையில் மட்டுமல்ல, தமிழர் தாயகத்தில் மட்டு
மல்ல சிறைச்சாலைகளிலும்கூட பாதுகாப்பு இல்லை என்பதையும் சிறிலங்கா அரசு
காலத்துக்குக் காலம் நிரூபித்து வந்தது.

வெலிக்கடைச் சிறை, பூசா, களுத்துறை,பெலவத்தை, பிந்துனுவெவ தடுப்பு முகாம்கள், திருகோணமலைச் சிறை போன்றவற்றில் நடைபெற்ற தமிழர் படுகொலை தொடர்பாக எவருமே தண்டிக்கப்படவில்லை. வெலிக்
கடைச் சிறையில் 1983, ஜுலை 25இல் 35 தமிழர் கொடூரமாகப் படுகொலை செய்யப்
பட்ட பின்னர் மீண்டும் ஜுலை 27இல் அதே சிறையில் எஞ்சியோர் பதினெட்டுப்பேர் படுகொலை செய்யப்படக் கூடியதாக இருந்த தென்றால் தமிழர்களின் உயிர் தொடர்பாகச் சிறிலங்கா ஆட்சியாளர்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகள் எவ்வாறிருந்தன என்பதை உணரமுடியும். இவ்வாறு நீண்ட இந்த இன அழிப்பு
முயற்சிகளினால் இதுவரை அறுபதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். ஆயினும் இவற்றால் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் தடைப்படவில்லை.

 

மாறாக அது முனைப்படைந்து கூர்மைபெற்றுள்ளது. இவ் விடுதலைப்போராட்டம்
இன்று அரசியல், இராணுவ தளங்களில் மிகப் பலம் மிக்கதாக பரிணாமமடைந்
துள்ளது. தேசிய விடுதலைப்போராட்டத்தின் தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இதனைப் புலமைசார் நிலையில் வலியுறுத்தி வருபவர்களும் ஊடக
வியலாளர்களும் படுகொலை செய்யப்படும் துர்ப்பாக்கிய நிலையை சிங்களப் பேரின வாதம் அண்மைக் காலமாகத் தீவிரப்படுத்தியுள்ளது.

 

சட்டமேதை குமார் பொன்னம்பலம், ஊடகவியலாளர்களான மயில்வாகனம் நிமல
ராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரட்ணம் சிவராம் போன்றவர்களுடைய படுகொலைகள் சிங்களப் பேரினவாதத்தின் அகோர முகத் தின் வெளிப்பாடுகளாகும்.
தமிழினப் படுகொலைகளுக்காக உலகின் மிகக் கொடூரமான முறைகளை
எல்லாம் தனது படைகளுக்குப் பயிற்று வித்துச் செயற்படுத்திப் பார்க்கும் அரசியல்
தலைமைத்துவங்கள் தொடர்ந்தும் இலங்கைத் தீவை ஆட்சிசெய்கின்றன. இதற்கென
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பயிற்சியளித்துள்ளனர். இதனைச் சிறிலங்கா இரா ணுவ உயர் அதிகாரி ஒருவரே வெளிப்படையாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா இராணுவத்தில் விசேடகுழுக்களின் உறுப்பினர்கள் என இனங்காணப்பட்ட 300–400வரையான ஆட்களுக்கு

 

கட்டுப்பாடின்றிக் கொலை செய்வதற்காகப்பயிற்சி அளிக்கப்பட்டதாக சண்டே லீடருக்குவழங்கிய தகவலில் தெரிவித்திருக்கின்றார். பொதுப்படையாகவே சிறிலங்காப் படையினர் எத்தகைய மனோபாவத்துடன் தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு விசேட பயிற்சியை அளிக்க வந்த பிரித்தானிய எஸ்.ஏ.எஸ் படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியே எடுத்துரைத்துள்ளார். அவர்களுக்கு நல்லது கெட்டது என்று எதுவும்
இல்லை. தமிழரைக் கொன்றொழிப்பதைத்தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லை.
நாங்கள் பயிற்சியளித்தவர்களில் சிலர் மிகக் கொடூரம் புரிந்தவர்கள் என Immediate Action என்ற தனது நூலில் விபரித்திருக்கின்றார்.
1987, பெப்ரவரி 30இல் கொக்கட்டிச் சோலையில் இடம்பெற்ற படுகொலையும் அதற்கென அளிக்கப்பட்ட ஒரு பயிற்சியின் அடிப்படையில் செய்யப்பட்டதே. பிரிட்டனின் கீனிமீனி (k m s ) பயிற்சி படைகளுக்கு அளிக்கப்பட்டதாகவும் அதனை பரீட்சித்துப்பார்ப்பதற்காக-பெற்ற பயிற்சியினை படையினர்
சரியாகச் செய்கின்றார்களா என்று அறிவதற் காக இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட தாகவும் பயிற்சியளித்தவர்களே தெரிவித்திருக்கின்றார்கள். தமிழ்மக்களையும் தமது பிரஜைகளே என வெளியுலகிற்குக் கூறிக்கொள்ளும்
தன்னை ஒரு ஜனநாயக அரசாகக் காட்டிக் கொள்ளும் சிறிலங்கா தமிழினத்தை அழிப் பதற்காக எவ்வாறு தயார்ப்படுத்தல்களை
மேற்கொண்டுள்ளது என்பதற்கு இவை சிறு எடுத்துக்காட்டுக்களே.
சிறிலங்கா அரசினதும் படைத்துறையினதும் இருப்பும் வளர்ச்சியும் தமிழினப்படு
கொலைகளையே நோக்கமாகக் கொண்டவை. இவையின்றி அவற்றால் தம்மைத் தக்க வைத்துக்கொள்ள இயலாது என்பதுதான் யதார்த்தமானது. கடந்த மூன்றரை வருடங் களாக நிலவும் சமாதானத்துக்கான சூழலிலும் இது புலப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

கிழக்கில் காஞ்சிரங்குடாவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும் மட்டக்களப்பு
சந்திவெளியிலும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி யிலும் மக்கள் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் சிறிலங்கா படைப் பாரம்பரியத்தின் வெளிப்பாடே ஆகும். இவ்வாறே படைகள் நேரடியாகப் படுகொலைகளை நிகழ்த்த
முடியாது போயிருக்கும் சூழ்நிலைகளில் தனது புலனாய்வாளர்கள் ஊடாகத் தமிழ்
மக்களை இலக்குவைத்து தாக்குதல்களை
நடாத்திக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக கிழக்கிலும் தென்னிலங்கை
யிலுமாக ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.
தமிழ்மக்களது போராட்டம் உரிமைப் போராட்டமாகத்தான் ஆரம்ப காலகட்டத்தில்
முன்னெடுக்கப்பட்டது. தமிழ்மக்கள் தங்க ளுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக சாத்வீகப் போராட்ட வடிவத்தையே பின்பற்றினார்கள். தமிழ்மக்களது உரிமைப் போராட்டம் இராணுவ பலத்தின் மூலம் பல்வேறு
சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ளப்பட்டது. சாத்வீகப் போராட்டங்கள் இராணுவ
ஒடுக்குமுறையாலும் இனப் படுகொலைகளாலும் சிங்கள ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டன. இந்த நிலையில் இராணுவ ஒடுக்கு முறைகளையும், இனப் படுகொலைகளையும்எதிர்கொள்ளவே இளைஞர்கள் ஆயுதம்
தாங்கினார்கள். இதனால் தமிழ்மக்களது உரிமைப் போராட்டங்கள் தேசிய விடுதலைப் போராட்டமாகப் பரிணமிக்கலாயின.

இந்த நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் இனப் படுகொலைகளைத்
தீவிரப்படுத்தலாயிற்று. மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் தமிழர் தாயகத்தை விடுவிக்கவும் அவர்களது உயிர், உடமைகளைப் பாதுகாக்கவும் விரிவாக்கம் பெற்றபோது அதுவொரு மக்கள் போராட்டமாக விரிவடையலாயிற்று. இந்தக் கட்டத் தில் விடுதலைப்புலிகளுக்கு அரசியல், இராணுவ பரிமாணங்களில் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தேவை, நிலைமை
ஏற்பட்டது. அதனால் விடுதலைப்புலிகள் ஒரு விடுதலை இராணுவமாகவும் அதேவேளை யில் தமிழ்த்தேசியப் பாதுகாப்புப் படையாக
வும் பல்வேறு தளங்களில் செயற்படலாயினர்.

SHARE