அன்றைய மும்மூர்த்திகள்.

998

முப்பது வருடகால போராட்டத்தின் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அதன் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அதன் இராணுவத் தளபதி கருணா அம்மான் இந்த மூவருக்கும் இடையில் நீண்டகால ஒற்றுமை நிலவி வந்தது. இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இந்த மூவரும் அரும்பெரும் பங்காற்றியிருந்தனர்.
பிரபாகரனின் வலது கையாக பொட்டு அம்மானும், இடது கையாக கருணா அம்மானும் இருந்து வந்தனர். இந்திய இராணுவக் காலப்பகுதிகளிலிருந்து பிரேமதாசா ஈடாக மகிந்த அரசு வரையிலும் பிரபாகரன் இணைந்து பொட்டு அம்மான் இருவரும் காத்திரமான போர் பலவற்றை தொடுத்து அதில் வெற்றியும் கண்டிருந்தனர்.
பிரபாகரனின் வலது கையாக செயற்பட்டு வந்த பொட்டு அம்மான் அவரின் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவை திறம்பட நடத்தி வந்தார். அதே போன்று கருணா அம்மானும் தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை பல களமுனைகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். உதாரணமாக ஆணையிறவு சமர், முல்லைச்சமர், ஜெயசிக்குறுச் சமர் என பல்வேறு சமர்களில் பங்கெடுத்து பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றார்கள்.
ஜெயசிக்குறுச் சமரை முறியடித்ததன் மூலம் ஜெயசிக்குறு கதாநாயகன் என்ற பட்டத்தை கருணா அம்மானுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வழங்கி கௌரவித்தார். அதுமட்டுமன்றி பல களமுனைகளில் வெற்றிகளை குவித்ததன் மூலம் கருணா அம்மானுக்கு ஐந்துக்கு மேற்பட்ட விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

20070420002303503
நீண்ட காலமாக களமுனைகளில் போராடிவந்த கருணா அம்மானுக்கு மகிந்தராஜபக்ச அரசின் இராஜதந்திர பேர்ச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இந்த பேச்சுவார்த்தைகளை ஐந்து வருடங்கள் நீடிக்க வேண்டும் என்பதே பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. அதையே பொட்டு அம்மான், கருணா அம்மான் இருவரிடமும் பிரபாகரன் தெரிவித்திருந்தார். ஆனாலும் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடகிழக்கில் ஆயுதமற்ற கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தமிழர்கள் மத்தியில் சமாதானம் உருவாக்கும் நோக்கில் இலங்கை அரசுடன் நோர்வே அரசாங்கம் செயற்பட்டு வந்தது. யுத்தத்தினால் மாத்திரமே எமது தேசிய ஒருமைப்பாட்டினை பெற்றுக் கொள்ள முடியும் என்ற முனைப்போடு பிரபாகரன் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.
பிரபாகரனின் ஒற்றைப்போக்கை நன்கு அறிந்த கருணா அம்மான் மார்ச் 03,2004 அன்று விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்து விலகிக் கொண்டார். அத்தோடு வன்னியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு ஓமந்தையிலிருந்து அரச உலங்கு வானூர்தி மூலம் பிரபாகரனுக்குத் தெரியாமல் கிழக்கை வந்தடைந்தார்.
இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகளில் நடைபெற்றது என்ன என்று தெரிவிக்கும் படியாக கருணா அம்மானையும் அவரது சகாக்களையும் மீண்டும் வன்னிக்கு வருமாறு பிரபாகரன் அழைத்திருந்தார். இதற்கு முன் இடம்பெற்ற சம்பவத்தை இங்கு குறிப்பிடவேண்டும். டோக்கியோ பேச்சுக்களின் போது நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக கருணா கைச்சாத்திட்டுவிட்டார் என்று தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான் பிரபாகரனுக்கு வழங்கிய செய்தியினால் ஆத்திரமடைந்த பிரபாகரன், மாத்தையா செய்த துரோகத்தை கருணா எனக்கு செய்து விட்டான். என்ற வார்த்தை பிரயோகத்தை பிரபாகரன் பாவித்து விட்டார்.
இதன் காரணமாக அடுத்து என்ன நிகழப்போகிறது? என்பதை அறிந்து கொண்ட கருணா அம்மான்.
கிழக்கை நோக்கி நகர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். கிழக்கை நோக்கி வந்தடைந்த கருணா அம்மான் வன்னித்தலைமைக்கு ஒரு சவாலை விடுத்திருந்தார். அது என்னவென்றால், கிழக்குப் பகுதியை தான் தக்க வைத்துக்கொள்வதாகவும், வன்னிப் பகுதியை நீங்களே பார்த்துக் கொள்ளுக்கள் என்றும் என்னுடன் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருக்கிறார்கள். என்றும் அவர்களைக் கொண்டு நான் கிழக்கு மாகாணத்தை மீட்டெடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில் வன்னியிலிருந்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பொட்டு அம்மானின் புலனாய்வுப் பிரிவினர் கருணாவுடன் சமரசபேச்சுக்கள் செய்வது போல் அனுப்பப்பட்டனர். பிரபாகரனினதும் பொட்டு அம்மானினதும் தந்திரத்தை நன்கு அறிந்த கருணா அம்மான் இவர்கள் என்னிடம் பேச வரவில்லை மாறாக என்னையே அழிக்க வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். வன்னியிலிருந்து வந்த பொட்டு அம்மானினது புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் இரகசிய சண்டைகள் இடம்பெற்றன. இதில் பல போராளிகள் கொல்லப்பட்டனர். பொட்டு அம்மானின் ஒரு சில போராளிகள் காவலில் அடைக்கப்பட்டனர்.

images
இதற்கிடையில் வன்னிப்புலிகள், மட்டுப்புலிகள் என்றும் பிரதேசவாதம் எழுப்பப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கருணாவின் பிரதேசவாதக் கருத்துக்களை உள்வாங்கி ஆர்ப்பாட்டம், ஊர்வலம், என்று தேசியத்துக்கு எதிராக களமிறங்கியிருந்தார்கள். அம்பாறை மாவட்ட தளபதிகள், போராளிகள் என்று ஒரு தொகையானோர் கருணாவின் பின்னால் அணி திரண்டிருந்தார்கள்.
அவர்களில் பெரும் பான்மையோருக்கு அந்த நேரத்தில் கருணாவின் பின்னால் அணி திரள்வதை விட வேறு வழியிருக்கவில்லை. அதேநேரம் கருணா ஸ்ரீலங்கா இராணுவத்தினரோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தனது இருப்பையும், பாதுகாப்பையும் ஓரளவு உத்தரவாதப்படுத்திக் கொண்டார்.
‘ உண்மையில் கருணா அம்மான் விடுதலை உணர்வோடு கடந்த 25 வருடங்களாக தமிழீழம் மலரும் என்ற கனவோடு பல வெற்றி தாக்குதல்களை நடத்தி, மிகச்சிறப்பான முறையில் பிரபாகரன் இருப்பை பாதுகாத்துக் கொடுத்தார் என்ற அந்த பெருமை கருணா அம்மானையே சாரும்.’

air11
கருணாவின் பிரிவு என்பது விடுதலைப்புலிகளுக்கு ,றுதிவரை பெரும் சவாலாகவே அமைந்திருந்தது. பிரபாகரன் கருணா அம்மானையும் அவரது சகாக்களையும் சுட்டுக்கொல்லுமாறு ஜெயந்தன் படையணியினருக்கு அப்போது உத்தரவிட்டார். இவை அனைத்திற்கும் காரணமாக அமைந்தவர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் 03.03.2004ஆம் திகதி விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து செல்வதாக அறிவதைத் தொடர்ந்து, வெருகல் என்று கூறப்படுகின்ற வாகரை பிரதேசத்தின் வடக்கு எல்லை மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காகே சுமார் 68 முஅ தொலைவில் அமைந்துள்ள வெருகலாறே மட்டக்களப்பு மாவட்டத்தையும் திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கின்ற ஒரு எல்லையாக இருந்து வந்தது. கருணாவிற்கு ஆதரவான போராளிகள் லெப்டினன் கேணல்.ரெஜி (கருணாவின் மூத்த சகோதரன்) தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான சார்ள்ஸ் அன்ரனி படையைச் சேர்ந்த போராளிகள் வெருகலாற்றுக்கு வடக்காக திருகோணமலை மாவட்டத்திலும் நிலைகொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளுக்குள் பிரச்சினை வலுவடைந்து இருவருக்குமிடையில் சகோதரப் படுகொலைகள் முடியும் வரை இலங்கை அரசாங்கம் கண்களை மூடிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் பொட்டு அம்மானின் புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்டனர். இராணுவத்தினராலே கொல்லப்படமுடியாத பல முக்கிய தளபதிகள் வன்னிப்புலிகளாளும், கிழக்குப் புலிகளாலும் மாறி மாறி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் போது வன்னிப்புலிகளுக்கே அப்போதைய அரசாங்கம் பெரும்பாலான உதவிகளை வழங்கியது. கருணா அணியினரை அழிப்பதற்கு வன்னியிலிருந்து புலிகள் வாகனங்களினூடாக மட்டக்களப்பு நோக்கி வந்திருந்தமையும், ,தற்கு முக்கிய காரணம் கருணா அம்மானே என பொட்டு அம்மான் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

வெருகலாற்றை கடந்தே படையினர்களின் முன்னேற்றம் இருக்கும் என்பதே கருணா அணியின் எதிர்ப்பாக இருந்தது புலிகள் வெருகலாற்றை கடந்து வரும் போது அவர்களை இல்லாதொழித்து விடும் அழித்தொழிப்பு திட்டமே கருணா அணியினருக்கு இருந்தது. அது போன்று வன்னி புலிகளும் வெருகலாற்றில் கருணா அணியினரை அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டியே இறங்கினார். ஆனாலும் புலிகள் பிரதேசத்தை அண்டிய கட்டுமுறிப்பு காட்டுக்குள் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் படைப்பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பிக்கும் போது பாரிய அழிவுகளை ஏற்படுத்தி புலிகளுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்துவதே கருணா அணியின் திட்டமாக இருந்தது. களமுனை தளபதிகளுக்கும் கருணா அம்மான் அப்படியே உத்தரவிட்டிருந்தார். ஆனால் கருணா அணியினர் எரிர்பார்த்தது போன்று புலிகளின் நகர்வு அமைந்திருக்கவில்லை.
கருணா அணியினர் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் புலிகளின் நகர்வுகள் ,ருந்தன 9ம் திகதி அதிகாலை 2 மணியளில் சண்டை ஆரம்பமானது. சுமார் 3 மணியத்தியாலத்திற்குள்ளேயே சண்டைகள் நிறைவடைந்தது. இச் சமரின் போது போராளிகள் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிழக்குப் புலிகளின் துல்லியமான நிலைகளின் மீது உக்கிரமான தாக்குதல்களை மேற்க்கொண்டனர். அத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனே வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். கருணாவிற்கு எதிராக வன்னியில் இருந்த புலிகளின் தளபதிகளுக்கு கருணா அம்மானை உயிருடன் பிடிக்கும் படி அல்லது கொலை செய்யும் படி பிரபாகரன் உத்தரவிட்டார்.

இது தொடர்பில் ஏனைய தளபதிகளுக்கிடையே முரண்பாடுகள் இருந்து வந்தது. 25 வருடகாலமாக விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறப்பாக செயற்பட்ட கருணா அம்மான் கொலை செய்யப்படுவதை எந்தப் போராளிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொட்டாரின் உள்ளக சூழ்ச்சியே இவ்வாறான முறுகள் நிலைக்கு காரணமாக அமைந்தது. விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவான ‘டெசி’ கிழக்கு மாகாணத்தில் அகலக்கால் வைத்தது.இதனால் கருணா அம்மானின் நகர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டன.

விடுதலைப்புலிகளின் தந்திரோபாயத்தை ஏற்கனவே அறிந்து கொண்ட கருணா அம்மான் கிழக்கு மாகாணத்தை விட்டு ஏற்கனவே இரகசியமாக வெளியேறினார்.  இது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் சவாலாக அமைந்தது. கருணா அம்மானின் அணியினர் வெருகலாற்றை குறிவைத்து காத்திருக்க கடல் மூலமாகவும் வாவிமூலமாகவும் நகர்ந்த ஜெயந்தன் விசேட படைப்பிரிவு போராளிகள் கருணா அம்மானின் கட்டுப்பாட்டின் இருந்த பிரதேசங்களை நான்கு முனைகளாலும் ஊடறுத்து ஏற்கனவே நிலையெடுத்து பிரதான தாக்குதல் வெருகல் பகுதியூடாகவே திட்டமிடப்பட்டிருந்தது. சண்டைகள் ஆரம்பமாகி 1 மணியத்தியாலயத்திலேயே கருணா அணியினர் பல துண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டார்கள்.
கருணா அணியினரால் மற்றைய அணியினருடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகள் பால்ச்சேனையிலிருந்த கருணா அணியினரின் மோட்டார் நிலைகள் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்த 120 ஆஆ மோட்டார்களையும் 1000ற்கும் மேற்பட்ட எறிகணைகளையும் கைப்பற்றி வந்தனர். இதன் காரணமாக வெருகல் வழியாக முன்னேறும் போது அங்கு எதிர்ப்பதற்கு யாரும் இருக்கவில்லை. அதே வேலை இத் தாக்குதல் ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி றமேஸ் அதி சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் கருணா தரப்பில் களத்தில் இருந்த பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தேசியத்தலைவர் அணி அங்கு வந்திருக்கின்றோம் என்றும் அதனோடு இணைந்து தலைவருக்கு உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போராளிகள் பிரபாகரன் அணியில் இணைந்து கொண்டனர். இதற்கிடையில் கருணாம்மான் தொடர்பான போலிப்பிரசாரங்கள் பொட்டு அம்மானால் வெளியிடப்பட்டிருந்தன.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான விடயம் என்னவென்றால் அதிகப் போராளிப் பெண்களுடன் கருணா அம்மான் பாலியல் ரீதியான தொடர்புகளை வைத்திருந்தார். என்று பிரபாகரனுக்கும் கூறப்பட்டது. ஏனைய மக்களுக்கும் கூறப்பட்டது. காரணம் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை உருவாக்குவதே பொட்டரின் உள்நோக்கமாகும்.
இவ்வாறான செயற்பாடுகளில் கருணா அம்மான் ஈடுபட்டார் என்று சொல்வதற்கு அப்பால் அவரின் பெருமிதத் தன்மைகளை பொட்டு அம்மான் கூற மறந்து விட்டார். காரணம் தன்னைவிட கருணா பிரபாகரனுக்கு விசுவாசமாகி விடுவார் என்ற காரணத்தினால். 2004ம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதி அதிகாலை புலிகள் தரப்பிலிருந்து தாக்குதல் கருணா அணியினருக்கெதிராக தொடுக்கப்பட்டது. இதன் போது அப்பிரதேசத்தில் கருணா அணியினருக்கு பொறுப்பாக இருந்த தளபதி ரெஜி தப்பியோடி விட்டார். அவரோடிருந்த ஒரு சில போராளிகளும் ஆயுதங்களை தூக்கிப் போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். கருணா தரப்பில் இருந்த வினோதன் படையணி மற்றும் விசாலன் படையணி லெப்ரினன் கேணல் ரொபட் மற்றும் லெப்ரினன் கேணல் தாத்தா தலைமையில் நகர்வு ஒன்றை மேற்கொண்டு வாகரையில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகள் அணியினரை சுற்றிவளைத்து தாக்க வேண்டும் என்று கருணாம்மான் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இப்படைநகர்வு பெரிதளவில் கைகூடவில்லை கருணா அணியினர் வெருகலாற்றுப் பகுதியில் அடைந்த தோல்வியின் பின்னர் புலிகள் ஒரு பெரிய வெற்றியைக் கண்டுவிட்டனர் என்று பலரும் பாராட்டியிருந்தனர். ஏற்கனவே குறிப்பிட்டது போல கருணா அம்மானின் ழப்பு பிரபாகனுக்கு தான் முழு விசுவாசமாக செயற்பட முடியும் என்ற பொட்டரின் எண்ணக்கருவும் கடைசியில் அற்றுப்போயிற்று. அன்றைய மும்மூர்த்திகளில் ஒரேயொரு மூர்த்தி மாத்திரம் தப்பியுள்ளார். அவரே விநாயகமூர்த்தி முரளிதரன் என்பதும் குறிப்பிடத்தக்கதாவும்.
-முற்றும்-

SHARE