கோத்தபாயவின் இறுதி யுத்தமும் பால்ராஜின் மறைவும்…

629

கோத்தபாய ராஜபக்ச இராணுவ சேவையில் இணைந்து 20 வருடங்கள் சேவை செய்தார். கோத்தபாய ராஜபக்ச அவர்கள் 25 நொவம்பர் 2005ஆம் திகதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் செயலாளர் பதவிக்கு பணிக்கப்பட்டார். இப்பதவிக்கு முன் ஐக்கிய அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லொயோலா சட்டக்கல்லூரியில் யுனிக்ஸ் சிஸ்டம் நிர்வாகியாக பணிபுரிந்தார்.

gotabhaya

இவரது 20 வருட சேவையில் 1991ஆம் ஆண்டு சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உதவி கட்டளைகள் தளபதியாக கடமை செய்தார். மேலும் லெப்டினன் கேணல் தரத்தில் 1990 இலிருந்து 1991ம் ஆண்டு வரை மணலாற்றுப் பகுதி இணைப்பு அதிகாரியாகவும் இதற்கு முன் மாத்தளை மாவட்ட இணைப்பதிகாரியாகவும் கடமையாற்றிய அவர் 1989 இலிருந்து 1990ம் ஆண்டு வரை முதலாவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றினார். இராணுவ கட்டமைப்பில் விரிவுரையாளராக, உதவி அதிகாரியாக, படைநடவடிக்கைக் கட்டமைப்பின் அதிகாரியாக இவ்வாறு பல பதவிகளை இக்காலப்பகுதியில் வகித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் இராணுவத்தில் சேவை செய்த போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களின் பாராட்டையும் சிபாரிசு கடிதத்தையும் பெற்றுள்ளார். இராணுவத்தில் வீரச் செயல்களுக்காக வழங்கப்படும் ரணவிக்கிரம், ரணசூர (இருமுறை) ஆகிய பதக்கங்களை முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். இவரது வீரச் செயல்களைப் பாராட்டி இராணுவத் தளபதியின் சிபாரிசையும் பெற்றார்.

இவர் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட படைநடைவடிக்கைகளில் பல்வேறு தரத்தில் படைகளை வழிநடத்தியுள்ளார். யாழ் குடாவையும், யாழ் கோட்டையையும் பயங்கரவாதிகளிமிருந்து பாதுகாக்க 1987 ஆம் ஆண்டு வடமராட்சி, 1990 ஆம் ஆண்டு திரவிடபலய ஆகிய இராணுவ நடவடிக்கையின் போது முதலாவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகப் படைகளை வழி நடத்தினார்.

i3  images (3)
கோத்தபாய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் தெற்கில் அமைந்துள்ள வீரக்கெட்டிய எனும் கிராமத்தில் பிறந்து கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்ற அவர் இராணுவ அடிப்படை பயிற்சியை தியத்தலாவ இராணுவக் கல்லூரியில் பெற்று இளநிலை அதிகாரிகளுக்கான பயிற்சியை பாகிஸ்தான் ராவல்பிண்டியிலும் பின்பு நடுநிலை அதிகாரிகளுக்கான பயிற்சியை குவற்றாவிலும் பெற்றார். அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளை எதிர்த்துத் தாக்குதலும் வனப்போரியல் உயர் பயிற்சியை இந்தியாவிலுள்ள அசாமில் பெற்ற அவர் பின்பு பயிற்சிக் கல்லூரியில் உயர் காலாற் படைப்பயிற்சியில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

மேலும் 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வாசிங்டன் நகரிலுள்ள பாதுகாப்பு விடயத்துக்கான கல்வியற் கல்லூரியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கல்வியை முடித்துக் கொண்டதுடன் மெட்றாஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கல்வியில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தில் பட்டப்படிப்பையும் பெற்றுக் கொண்ட பட்டதாரியாவார்.

கடந்த 30 வருட கால போராட்டத்தை 2099ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும். நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சரத்பொன்சேகாவை தந்திரோபாயமாக வெளியேற்றிவிட்டு யுத்தத்தின் இறுதி வெற்றியை தன்னகத்தே ஆக்கிக்கொண்டார். இதில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பையும் அதன் ஆதரவையும் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுதும் இலங்கையின் இராணுவக் கட்டமைப்பை உலகலாவிய ரீதியில் உயர்த்தி வருவது மட்டுமன்றி இலங்கை இராணுவத்தின் புலனாய்வுக்கட்டமைப்பு நல்லதோர் இடத்தை பிடிப்பதற்கு வழியமைத்தவரும் இவரே.

gothapaya_visite_jaffna_08011421

பிரிக்கேடியர் பால்ராஜ் உயிருடன் இருந்திருந்தால் வன்னியை கைப்பற்றியிருக்க முடியாது.
இருந்தபொழுதும் பிரிக்கேடியர் பால்ராஜ் ஓர் சிறந்தபோராளி அவருடைய போராட்ட வரலாற்றில் இராணுவத்தினர் வியக்கும் வகையில் போராட்டத்தின் உத்திகள் கையாளப்பட்டன.

முல்லைத்தீவு டொலர் பாம் தாக்குதலின் போது 14ற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கைப்பற்றி விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்ப கட்டத்தில் அடியெடுத்துக்கொடுத்தார். இவருடைய தனித்திறமை என்னவென்றால் ஒரு முகாமை தாக்கி அங்கிருக்கும் ஆயுதங்களை கைப்பற்றி தனது பாசறைக்கு கொண்டு சேர்க்கும் ஆற்றல் படைத்தவர். தமிழீழ வரலாற்றில் இவர் பங்கு பற்றாத சண்டைக்களங்களே இல்லை. 1987ம் ஆண்டு முல்லைத்தீவு காட்டுப்பகுதி புலிகளின் முகாம் மீது படையெடுத்த இந்தியா இராணுவத்தினரை ஒரு அடி நகரவிடாமல் வைத்திருந்த பெருமை பால்ராஜ் அவர்களையே சாரும்.

Untitled20130520030525 20080521008

மீண்டும் 1990ம் ஆண்டு முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலை பிரிகேடியர் பால்ராஜ் தலைமை தாங்கி வழிநடத்தி பெருமளவிலான ஆயுதங்களை கைப்பற்றி முல்லைத்தீவு முகாமை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படை தளபதியாகவும், விடுதலைப்புலிகளின் இராணுவத் தளபதியாகவும் ஆரம்பக்கட்டங்களில் செயற்பட்டு வந்தார். இவருடைய களச்சமர் என்பது இலகுவான வெற்றியை குறைவான போராளிகள் மூலம் பெற்றுக் கொள்வதே இவரின் சிறப்பம்சமாகும். சண்டைகளை நெறிப்படுத்துவதில் இவர் ஒரு வல்லுநர்.

களத்தில் நிற்கும் போராளிகளுடன் தானும் களத்தில் நின்று போராடக் கூடியவர் பிரிக்கேடியர் பால்ராஜ். 1990 க்குப் பின்னர் தாக்குதலை திறம்படவே நடத்தி பிரபாகரனின் விசுவாசத்திற்கு உரிய நபராக திகழ்ந்தார். அது மட்டுமன்றி எதிரிகளை தாக்கி அவர்களின் ஆயுத தளபாடங்களை கைப்பற்றுவதில் இவர் சிறந்து விளங்கினார். இவர் இந்தியாவில் 9வது முகாமில் பயிற்சிகளை முடித்துக்கொண்டார். 1991 – 1997 சார்ள்ஸ் அன்ரனியின் சிறப்புப் படைத்தளபதியாக பணியாற்றி வந்தார். சிறிலங்கா இராணுவத்தினரால் வன்னிவிக்கிரம என்ற படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது அத்தாக்குதலை முறியடித்து வெற்றியும் கண்டார். அதன் போது ஒரு உலங்கு வானூர்தியும் பால்ராஜினால் வீழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினரின் மின்னல் படைத்தாக்குதலை எதிர்த்து கடும் சண்டை புரிந்தார். அதன் பின்னர் 1992 பலாலி படைமுகாம் மீதான தாக்குதலில் பால்ராஜ் பங்கேற்றி வெற்றி கண்டார். அதன் பின் ஆனையிறவு களச்சமர்களில் இருமுறை பங்கேற்றியிருந்தார்.

Brigadier-Balraj-reserved-01 Untitled20130520025149

ஆனையிறவை கைப்பற்றும் நோக்குடன் பால்ராஜின் ஜித்தாவில் தரையிறக்கமானது உலக போர் வரலாற்றில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதனை பால்ராஜ் அவர்களே தலைமை தாங்கி வழி நடத்தினார். பொக்ஸ் (BOX) என்று அழைக்கப்படும் தாக்குதல் பிரிகேடிஜர் பால்ராஜின் படையினர் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டிருந்தபோது தனது 450 படை வீரர்கள் சகிதம் உடைத்து வெளியேறினார். அதுமட்டுமன்றி குடாரப்பு தரையிறக்கமும் பிரிகேடியர் பால்ராஜ்க்கு பெருமை சேர்த்துக் கொடுத்தது. உலக நாடுகள் வியக்கும் வகையில் இவருடைய இராணுவத் தாக்குதல்கள் அமைந்திருந்தன.

Bricadiar-balraj-01 Ele_pass_(5)
பிரிகேடியர் பால்ராஜ் 20.05.2006 ஆம் ஆண்டு மாரடைப்பினால் மரணமடைந்தார். இதன் பின்னர் வன்னியில் படை நடவடிக்கைகள் தீவிரமாக இராணுவத்தினரால் காய்நகர்த்தப்பட்டன. பிரிகேடியர் பால்ராஜின் இறப்பை உறுதி செய்த இராணுவத்தினர் வன்னியை இலகுவில் கைப்பற்றிவிட முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தனர்.

அதன் ஒரு கட்டமாக மாவிலாறில் ஆரம்பித்த சண்டை முள்ளிவாய்க்காலில் முடிய காரணமானது. பிரிகேடியர் பால்ராஜ் இறந்ததற்குப் பின்னர் பிரபாகரனின் பாதுகாப்பு கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. மற்றுமொரு விடயம் என்னவென்றால் பிரிகேடியர் பால்ராஜ்க்கும் அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த கருணா அம்மானுக்கும் சண்டை வியூகங்கள் என்பது சிறந்ததொரு விடயமாக காணப்பட்டன. களமுனைச்சமரில் கருணா அம்மானும் பிரிகேடியர் பால்ராஜும் நெருங்கிய உறவினை வைத்திருந்தனர். இவர்கள் இவருவரின் இழப்பின் பின்னர் பிரபாகரனின் இருப்பை இராணுவம் இலங்கையில் கைப்பற்றிக் கொண்டது. இனி ஒரு பால்ராஜ் எழுந்து வரப்போவதில்லை.
– நெற்றிப்பொறியன் –

SHARE