யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

319
யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18)  என்ற உயர்தர வகுப்பு மாணவி நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

இதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் இன்றைய தினம் குறித்த மாணவியின் சடலம் கை,கால்கள் மரக்கட்டைகளால் இழுத்து கட்டப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் மீட்பு:

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 4 வட்டாரம் – கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய சி.வித்தியா எனும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பாடசாலை விட்டு வீடு திரும்பிய மாணவி வீட்டுக்கு வராத நிலையில், பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர்.

எனினும், குறித்த மாணவி தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்காத காரணத்தினால் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மாணவி இன்று வியாழக்கிழமை காலை கை,கால்கள் மரக்கட்டைகளால் இழுத்து கட்டப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE