கோடை காலம் என்றவுடனே அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் வியர்வை. அதிகம் வியர்க்கிறதா? உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்.

457
கோடை காலம் என்றவுடனே அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் வியர்வை.வியர்வை அதிகம் வெளிவந்தால் துர்நாற்றத்தை ஏற்படுத்தி, சங்கடமான சூழ்நிலை உருவாகும்.எனவே முகத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறாமல் இருக்க பேஸ் பேக் போடுவது அவசியம்.

* முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* இதேபோன்று கடுகை அரைத்து அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் பலன் கிடைக்கும்.

* அதிக நீர்ச்சத்துள்ள வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* பாலுக்கு பதிலாக எலுமிச்சை சாறு மற்றும் தேனை 1:2 என்ற விகிதத்தில் கலந்து, சருமத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால் முகம் புத்துணர்ச்சியுடன் வியர்வையின்றி காணப்படும்.

SHARE