“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை-நிமால் சிறிபால டி சில்வா

359

 

“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். “எமது பிரதான எதிரி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவரை ஒன்றிணைத்து எதிர்கால அரசியலை மேற்கொள்ள முடியாது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்துவதே எமது நோக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மீண்டும் தேசிய அரசு அமைவதற்கான சாத்தியம் உள்ளதா எனக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

aQPzr9P

SHARE