பார்சிலோனா அணியுடன் ரூ.155 கோடிக்கு மெஸ்ஸி விரைவில் புதிய ஒப்பந்தம்

686

ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த முன்கள வீரர் மெஸ்ஸி தற்போது லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார். 2005-இல் பார்சிலோனா அணியில் இணைந்த நட்சத்திர வீரரான மெஸ்ஸி நான்கு முறை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

சமீபத்தில் போர்ச்சுகலைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை அந்த அணி ரூ. 150 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.

அப்போதிருந்தே ரொனால்டோவுக்கு இணையாக மெஸ்ஸிக்கும் சம்பளம் வழங்கப்படும் என பேச்சு அடிபட்டது. சில தினங்களுக்கு முன்பு மெஸ்ஸியின் தந்தை பார்சிலோனா அணி நிர்வாகிகளை சந்தித்தார். பேச்சுவார்த்தையில் அடுத்த வாரம் மெஸ்ஸியுடன் ரூ.155 கோடிக்கு புதிய ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அநேகமாக லா லிகா இறுதிச் சுற்று முடிவதற்கு முன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். 2018 வரை மெஸ்ஸி பார்சிலோனா அணியில் ஆடுவதற்கான ஒப்பந்தம் ஏற்கெனவே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

SHARE